Site icon ITamilTv

2024 Olympics-ஒலிம்பிக் பதக்கங்கள் அறிமுகம்..!

2024 Olympics

2024 Olympics

Spread the love

2024 Olympics-2024 ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெரும் போட்டியார்களுக்கு வழங்கப்படும் ஒலிம்பிக் பதக்கங்களை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டில் பாரீசில் வரும் ஜூலை மாதம் ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது.

இந்த போட்டியில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்களும், வீராங்கனைகளும் பங்கேற்க உள்ளனர்.

இந்த ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லும் முனைப்புடன் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

மொத்தம் 329 விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளது. சுமார் 10,500 பேர் இதில் போட்டியாளர்களாக பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கான ஏற்பாட்டினை ஏற்பாட்டாளர்கள் ஒருங்கிணைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெரும் போட்டியார்களுக்கு வழங்கப்படும் ஒலிம்பிக் பதக்கங்களை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Isha Mahashivratri-”ஆதியோகி ரத யாத்திரை” வேலூரில் வரும் 8 -ம் தேதி.. ஈஷாவின் அசத்தல் அறிவிப்பு!

அதில் ,பாரீஸ் ஒலிம்பிக் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டிக்காக மொத்தம் 5,084 பதக்கங்கள் தயாரிக்கப்படுகின்றன.

இவற்றில் 2,600 பதக்கங்கள் ஒலிம்பிக்கிலும், மீதமுள்ள பதக்கங்கள் பாரா ஒலிம்பிக்கிலும் வழங்கப்பட உள்ளன.

பதக்கத்தின் முன்பக்கத்தில் கிரேக்கத்தின் வெற்றி கடவுளான நைக்கி ஏதென்ஸ் ஸ்டேடியத்தின் முன் நிற்பது போன்றும், ஒலிம்பிக் வளையம் மற்றும் ஒலிம்பிக்கின் பெயரும் பொறிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பிரான்சின் தனி அடையாளமான உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் கோபுர சின்னமும் ஒரு ஓரத்தில் இடம் பெற்றுள்ளது.

பதக்கத்தின் பின்பக்கத்தில் ஈபிள் கோபுரத்தின் இரும்பு பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:https://x.com/ITamilTVNews/status/1755840442799972544?s=20

அதாவது ஈபிள் கோபுரத்தை புதுப்பித்த போது அதில் இருந்து அகற்றப்பட்ட இரும்பு உலோகங்கள் பாதுகாப்பாக எடுத்து வைக்கப்பட்டு இருந்தன.

அவற்றை செதுக்கி, பாலிஸ் செய்து சிறிய துண்டுகளாக அறுங்கோண வடிவத்தில் பதக்கத்தின் பின்பகுதியில் பதிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு பதக்கத்திலும் ஈபிள் கோபுரத்தின் 18 கிராம் இரும்பு அடங்கியிருக்கும்.

பதக்கம் 85 மில்லிமீட்டர் சுற்றளவும், 9.2 மில்லிமீட்டர் அடர்த்தியும் கொண்டது. தங்கப்பதக்கம் 529 கிராம் எடை கொண்டது. இது முற்றிலும் தங்கத்தால் செய்யப்பட்டது அல்ல.

வெள்ளியால் உருவாக்கப்பட்ட இந்த பதக்கத்தில் 6 கிராம் தங்க முலாம் பூசப்பட்டு இருக்கும். வெள்ளிப்பதக்கம் 525 கிராமும், வெண்கலம் 455 கிராமும் எடை கொண்டது.

இந்த பதக்கங்களை பிரான்சின் பிரபல ஆபரண நிறுவனமான சாமெட் வடிவமைத்துள்ளது.

PUBLISHED BY : S.vidhya


Spread the love
Exit mobile version