Site icon ITamilTv

ஏர் இந்தியா விமானத்திற்குள் மழை.. அதிர்ச்சியில் பயணிகள்.. வைரலாகும் வீடியோ!!

Spread the love

டெல்லியில் இருந்து லண்டன் கேட்விக் நகருக்குச் சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்திற்குள் மழை தண்ணீர் ஒழுகியதால் பயணிகள் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.

டெல்லியில் இருந்து லண்டன் நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஏர் இந்தியா போயிங் பி787 ட்ரீம்லைனர் என்ற விமானத்தின் மேல்நிலை சேமிப்புப் பகுதியில் இருந்து விமானத்திற்குள் மழைத் தண்ணீர் கசிந்துள்ளது.

இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வரும் நிலையில், அந்த வீடியோவில் விமான பணிப்பெண்கள் மழைத் தண்ணீர் கசியும் பகுதிகளை துணியைக் கொண்டு அடைக்கும் காட்சிகளையும் பார்க்க முடிகிறது.

ஏற்கனவே பயணிகளுக்கான சேவை விதிகளை மீறியதற்காக சமீபத்தில் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் 10 லட்சம் ரூபாய் அபராதமாக விதித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நீர் கசிவு ஏற்பட்டு மழை போல் பொழிந்தமையினால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதேவேளை விமானத்தின் மேற்கூரையில் இருந்து தண்ணீர் கசிவதால் பயணிகள் அச்சப்பட வேண்டாம் என்றும் விமானி பயணிகளுக்கு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான காணொளியை விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் வீடியோ பதிவுசெய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்.

ஆனாலும், இந்த வீடியோவின் நம்பகத்தன்மை குறித்து ஆராயப்படவில்லை என்றும் இந்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. மேலும், குளிர்சாதன அமைப்பில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கூட இச்சம்பவம் நடந்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

இந்த வீடியோ தற்போது சமூகவலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.


Spread the love
Exit mobile version