Site icon ITamilTv

தாம்பரம்-கொச்சுவேலி.. கூட்ட நெரிசலை சமாளிக்க சிறப்பு ரெயில்!

Tambaram-Kochuveli special train

Spread the love

Tambaram-Kochuveli special train : ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறை காலத்தில் பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்க ரெயில்வே நிர்வாகம் சிறப்பு ரெயில்களை இயக்குவது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டும் சென்னையில் இருந்து மதுரை, ராஜபாளையம் வழியாக திருவனந்தபுரம் கொச்சுவேலிக்கு கோடை விடுமுறை சிறப்பு ரெயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வருகிற 16-ம் தேதி முதல் குளிர்சாதன பெட்டிகள் கொண்ட இந்த சிறப்பு ரெயில் வாரம் இருமுறை இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது (Tambaram-Kochuveli special train).

இதையும் படிங்க : மழையில் நெல் மூட்டைகள் நனையும் தொடர் கதைக்கு முற்றுப்புள்ளி வைத்திடுக : ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்!

இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..

கோடை விடுமுறை கூட்ட நெரிசலைச் சமாளிக்க சென்னை தாம்பரத்தில் இருந்து மதுரை, ராஜபாளையம், புனலூர், கொல்லம் வழியாக திருவனந்தபுரம் கொச்சுவேலிக்கு சிறப்பு ரெயில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, தாம்பரம் – கொச்சுவேலி சிறப்பு ரெயில் (வண்டி எண் 06035) மே 16 முதல் ஜூன் 29-ம் தேதி வரை வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் தாம்பரத்திலிருந்து இரவு 9.40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் பிற்பகல் 1.40 மணிக்கு கொச்சுவேலி சென்று சேரும்.

மறுமார்க்கத்தில் கொச்சுவேலி – தாம்பரம் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06036) மே 17 முதல் ஜூன் 30 வரை வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் கொச்சுவேலியில் இருந்து பிற்பகல் 3.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.35 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.

இந்த ரெயில் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, வில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில்,

பாம்புகோவில் சந்தை, கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை, தென்மலை, புனலூர், அவனீஸ்வரம், கொட்டாரக்கரை, குன்டரா, கொல்லம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரெயில்களில் 14 குறைந்த கட்டண குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதிப் பெட்டிகள், 2 சரக்குப் பெட்டியுடன் கூடிய மின்சார ஜெனரேட்டர் பெட்டிகள் ஆகியவை இணைக்கப்படும்” எனத் தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : தெலங்கானா மாநிலம் கோடங்கலில் உள்ள ஜில்லா பரிஷத் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்கு செலுத்தினர் அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி!


Spread the love
Exit mobile version