Site icon ITamilTv

போதைப்பொருள் கடத்தலில் Tamil film producer..!!

Tamil film producer

Tamil film producer

Spread the love

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஒருவர் நீண்ட காலமாக (Tamil film producer) போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்திருப்பது பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

டெல்லியில் நேற்று 50 கிலோ எடையுள்ள சூடோபெட்ரைன் என்ற போதை பொருள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இந்த கடத்தல் சம்பவத்தில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

போதை பொருள் இடதுபட்டு வந்தவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும், கடந்த மூன்று ஆண்டுகளில் 45 முறை போதைப் பொருட்களை வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளதும் தெரிய வந்தது.

சுமார் 3,500 கிலோ சூடோபெட்ரைன் வேதிப் பொருளை கடத்தியதன் மூலம் இந்த கும்பல் சுமார் ரூ.2000 கோடி வரை சம்பாதித்திருக்கலாம் என்று அதிகாரிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர் .

இதுமட்டுமின்றி தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு திரைப்பட தயாரிப்பாளர் தான் இந்த போதை பொருள் கடத்தல் கும்பலுக்கு மூளையாக செயல்பட்டவர் என்றும் தெரியவந்துள்ளது .

இதையடுத்து போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதை அறிகொண்ட அந்த நபர் தற்போது தலைமறைவாகி இருப்பதாகவும் , அவரை பிடிக்க தீவிர முயற்சிகள் நடப்பதாகவும் அதிகாரிகள் கூறினர்.

அவர் யார் என்பது குறித்த தகவல்களை அதிகாரிகள் நேற்று வெளியிடாமல் இருந்த நிலையில் . இன்று அதிர்ச்சி தரும் தகவல்கள் பல வெளியாகி உள்ளது.

அந்த நபர் மங்கை திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் என்றும் சென்னை திமுக மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் என்பதும் தெரியவந்துள்ளது.

இன்னொருவர் அமீர் இயக்கிய திரைப்படமான “இறைவன் மிகப்பெரியவன்” படத்தின் ஹீரோ மைதீன், அவரது நண்பர் சலீம்.

இந்த மூவரையும் போலீஸ் தனிப்படை அமைத்து (Tamil film producer) தீவிரமாக தேடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது .

இதோபோல் தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக போலீசாரின் தீவிர கண்காணிப்பில் கிலோ கிலோவாக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட இடங்களில் வெளி மாநிலங்களிலிருந்து கஞ்சா வாங்கி வந்து விற்பனை செய்வோரை கண்காணித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டிருந்தது.

அதன்படி அமலாக்க பிரிவு உதவி ஆணையாளர் தலைமையிலான தனிப்படையினர் சோதனை மேற்கொண்டிருந்தனர்.

Also Read : https://itamiltv.com/bjp-should-be-kicked-out/

11.02.2024 ஆம் தேதி வெளிமாநிலத்திலிருந்து ரேடியல் ரோடு வழியாக கார்களில் கஞ்சாவை கடத்தி வருவதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ரேடியல் ரோடு காமாட்சி மருத்துவமனை சந்திப்பில்

தீவிர வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டது அப்போது சுமார் 18.00 மணியளவில் வெளிமாநில பதிவெண்கள் கொண்ட இரு கார்களை நிறுத்தி சோதனை செய்ததில் 101 கிலோ எடை கொண்ட

சுமார் பத்து இலட்சத்து பத்தாயிரம் மதிப்புள்ள கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது .


Spread the love
Exit mobile version