ITamilTv

”சிதம்பரம் கோயில் பிரம்மோற்சவ விவகாரம்..” – உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சிதம்பரம் கோயில் govindaraja perumal temple

Spread the love

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குள் அமைந்திருக்கும் கோவிந்தராஜ பெருமாள் சன்னதிக்கு பிரம்மோற்சவம் நடத்த எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கை, கோயில்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வுக்கு மாற்றி, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் நான்கு ராஜகோபுரங்கள் உள்ளன. இவை ஏழு நிலைகளைக் கொண்டவையாகும். கோபுரத்தின் அடிப்பகுதி 90 அடி நீளமும், 60 அடி அகலமும் கொண்டதாகவும், 135 அடி உயரம் உடையதாகவும் அமைந்துள்ளது. இக்கோபுரத்தின் வாசல் 40 அடி உயரம் உடையவையாகும்.

மேலும் , சிதம்பரம் நடராசர் கோவிலில், கோவிலுக்குள் பல்வேறு கோயில்கள் அமைந்திருக்கின்றன.அதன்படி கோவிந்தராஜபெருமாள் கோவில் – நடராசன் சந்நிதிக்கு நேரெதிரே அமைந்துள்ளது.இந்த விஷ்ணு கோயிலில் மே 24ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை பிரம்மோற்சவம் நடத்துவதற்கு இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவம் நடத்த எதிர்ப்பு தெரிவித்து டி.ஆர்.ரமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.இந்த வழக்கு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

இதையும் படிங்க: கணவரை இழந்தவர் செங்கோல் பெறக்கூடாதா? எந்த ஆகம விதியில் உள்ளது? – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி

அப்போது, 400 ஆண்டுகளுக்கு இந்த கோயிலில் பிரம்மோற்சவம் ஏதும் நடத்தப்படவில்லை என்றும் இதுவரை இல்லாத நடைமுறையைஇப்போது புதியதாக செயல்படுத்த முயற்சிக்கின்றனர் என தெரிவித்தார்.மேலும் நடராஜர் கோவிலில் நடராஜர் தான் பிரதான தெய்வம் என்பதால், கோவிந்தராஜ பெருமாள் கோயிலுக்கு பிரம்மோற்சவம் நடத்த முடியாது என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதற்க்கு இந்து அறநிலையத்துறை தரப்பில், பக்தர்கள் விருப்பம் காரணமாக பிரம்மோற்சவம் நடத்தப்படுவதாக கோவிந்தராஜ பெருமாள் கோயில் அறங்காவலர்கள் தாக்கல் செய்திருக்கும் மனுவில் தெரிவித்திருப்பதாக தெரிவித்தனர்.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி இந்த வழக்கை கோயில்கள் தொடர்பான வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அமர்வுக்கு மாற்றிய தலைமை நீதிபதி அமர்வு, விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்துள்ளது.


Spread the love
Exit mobile version