Site icon ITamilTv

Tamil Nadu RTE Primary School Admissions 2024 : சேர்க்கை ஆரம்பம்!- மக்களே APPLY பண்ணுங்க..

Tamil Nadu RTE Primary School Admissions 2024

Tamil Nadu RTE Primary School Admissions 2024

Spread the love

Tamil Nadu RTE Admissions அனைவருக்கும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் நுழைவுநிலை வகுப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்கு ஏப்ரல் 22ம் தேதி முதல் மே 20ம் தேதி வரையில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தனியார் பள்ளிகள் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, அனைத்து மாவட்டக் கல்வி அலுலவர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், ‘குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் படி, நுழைவு நிலை வகுப்புகளில் (எல்கேஜி மற்றும் ஒன்றாம் வகுப்பு) மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது.

2024-25ஆம் கல்வியாண்டில் தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இடஒதுக்கீட்டின் கீழ், நுழைவு நிலை வகுப்புகளில் மாணவர் சேர்க்கை ஏப்ரல் 22ஆம் தேதி முதல் மே 20ஆம் தேதி வரை https://rte.tnschools.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆண்டு வருமானம் 2 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக உள்ள பெற்றோர்களின் குழந்தைகள், வாய்ப்பு மறுக்கப்பட்ட குழந்தைகள் உரிய சான்றுகளுடன் விண்ணப்பிக்கலாம். எல்கேஜி வகுப்பில் சேர்வதற்கு குழந்தைகள் 2020 ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல், 2021 ஜூலை 31ஆம் தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும். ஒன்றாம் வகுப்பில் சேர்வதற்கு குழந்தைகள் 2018 ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 2019 ஜூலை 31ஆம் தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும்.

இதையும் படிங்க: ”அரசுப்பள்ளி மாணவர்களுக்கு NEET Coaching” -தமிழக அரசின் புதிய அறிவிப்பு!

மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்கள் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்கள் வட்டார வள மைய அலுவலகங்கள் உள்ளிட்டவற்றில் இணைய வழியில் விண்ணப்பிப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். பெற்றோர்கள் தங்களின் வீடுகளில் இருந்து 1 கிலோ மீட்டருக்கு உட்பட்டு அமைந்திருக்கக் கூடிய தனியார் பள்ளிகளுக்கு 25 சதவீதம் இடஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கலாம்.

தனியார் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்புகளில் 25 சதவீதத்திற்கான இடஒதுக்கீட்டின் கீழ் உள்ள இடங்கள் குறித்த விபரத்தை ஏப்ரல் 10ஆம் தேதிக்குள் பள்ளிகளில் அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும். தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழ், விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இது குறித்த விபரத்தை ஏப்ரல் 15ஆம் தேதிக்குள் பள்ளியின் அறிவிப்பு பலகை மற்றும் https://rte.tnschools.gov.in/ என்ற இணையதளத்திலும் வெளியிட வேண்டும். https://rte.tnschools.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் ஏப்ரல் 22ஆம் தேதி முதல் மே 20ஆம் தேதி வரையில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

தகுதியான விண்ணப்பம் ஏற்கப்பட்ட விபரத்தையும், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்காக விபரத்தையும் மே 27ஆம் தேதி இணையதளத்தில் வெளியிட வேண்டும். தனியார் பள்ளிகளில் ஒதுக்கப்பட்ட 25 சதவீத ஒதுக்கீட்டிற்கு அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டிருப்பின், குலுக்கல் முறையில் மாணவர்களே தேர்ந்தெடுக்க வேண்டும் மே 28ஆம் தேதி அன்று குலுக்கல் நடத்த வேண்டும்’ என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Spread the love
Exit mobile version