Site icon ITamilTv

தமிழ்நாட்டில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம்..!!

10 public exam

10 public exam

Spread the love

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று விறுவிறுப்பாக நடைபெற உள்ளது. (10 public exam) இத்தேர்வை தமிழகத்தில் 9.10 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.

தமிழக பள்ளிக்கல்வி நடைமுறையில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டுக்கான பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த நிலையில் இன்று முதல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது.

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று (மார்ச் 26) தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது. அதன்படி இன்று தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது.

இந்த பொதுத் தேர்வை சுமார் 9.10 லட்சம் மாணவ, மாணவிகள், 28,827 தனித் தேர்வர்கள் மற்றும் 235 சிறை கைதிகள் உட்பட மொத்தம் 9.38 லட்சம் பேர் எழுதுகின்றனர்.

மாநிலம் முழுவதும் 12,616 பள்ளிகளில் இருந்து மாணவர்கள் தேர்வுகளில் கலந்துகொள்கின்றனர். இதையொட்டி, தமிழகம் முழுவதும் 4,107 தேரு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Also Read : https://itamiltv.com/fines-for-families-who-wasted-drinking-water-in-bangalore/

பொதுத் தேர்வு மையங்களுக்கான அறை கண்காணிப்பாளர் பணியில் சுமார் 48,700 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

முறைகேடுகளை தடுக்கவும் தேர்தல் பணிகளைக் கண்காணிக்கவும் 4,591 நிலையான மற்றும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அதேபோல் 304 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

பல கனவுகளோடு இன்று 10ம் வகுப்பு பொது தேர்வு (10 public exam) எழுத வரும் மாணவ மாணவிகள் அனைவருக்கும் I TAMIL NEWS சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.


Spread the love
Exit mobile version