Site icon ITamilTv

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்..!!

R.N. Ravi

R.N. Ravi

Spread the love

தமிழகத்தில் அரசியல் களம் தற்போது பரபரப்பாக இருக்கும் நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளது அரசியல் வட்டாரங்களில் கவனம் ஈர்த்து வருகிறது .

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று திடீர் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். ஆளுநருடன் அவரது செயலாளர், உதவியாளர், பாதுகாப்பு அதிகாரி ஆகியோரும் டெல்லி செல்கின்றனர்.

ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்கனவே ஆக.1ம் தேதி டெல்லி சென்று திரும்பிய நிலையில், 2வது முறையாக இன்று மீண்டும் பயணம் மேற்கொண்டுள்ளார்.

Also Read : என்.சி.சி. முகாமில் பாலியல் வன்கொடுமை – நா.த.க முன்னாள் நிர்வாகி கைது..!!

ஆளுநரின் பதவிக்காலம் ஜூலை 31ம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், பதவி நீட்டிப்புக்கான உத்தரவு இதுவரை வரவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று டெல்லிக்கு திடீர் பயணம் மேற்கொண்டுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து பதவி நீட்டிப்பு குறித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Spread the love
Exit mobile version