Site icon ITamilTv

”கதறிய பொது மக்கள்..”மாவட்ட ஆட்சியர் திடீர் விசிட் !!மருத்துவமனையில் நடந்தது சம்பவம்..

Spread the love

காரைக்கால் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற சிறிது நேரத்திலே காரைக்கால் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் குலோத்துங்கன் அதிரடி ஆய்வு நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

காரைக்கால் அரசு மருத்துவமனையில் போதிய வசதி மற்றும் மருத்துவர்கள் பற்றாகுறை உள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு முன்வைத்து வந்தனர்.

இந்த நிலையில் காரைக்கால் மாவட்டத்தில் புதிய ஆட்சியராக குலோத்துங்கன் இன்று பொறுப்பேற்றார். பொறுப்பேற்ற சில நிமிடங்களில் காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு நேரடியாக சென்ற அவர், அதிரடியாக ஆய்வு மேற்கொண்டார்.

மருத்துவமனையில் உள்ள மருத்துவர் விவரம் மருத்துவமனையில் உள்ள வசதிகள் குறித்து மருத்துவமனை நிர்வாகிகளிடம் ஆட்சியர் குலோத்துங்கன் கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் மருத்துவ வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

மேலும் மருத்துவமனையில் புகார்கள் எதுவும் இருந்தால் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திடம் பொதுமக்கள் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

தொடர்ந்து மருத்துவமனையில் நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் வாகனத்தில் குறித்தும் ஆட்சியர் ஆய்வு செய்தார்.

புதிதாக பொறுப்பேற்ற உடன் அதிரடியாக மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டுள்ள நிகழ்வு காரைக்கால் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.


Spread the love
Exit mobile version