Site icon ITamilTv

 ”சேதமடைந்த அரசு பேருந்துகள்..”கெடு விதித்த போக்குவரத்து துறை! 

chennai tamil nadu transport dept order

chennai tamil nadu transport dept order

Spread the love

தமிழகத்தில் சுமார் 20000 கும் மேற்பட்ட பேருந்துகள் அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் கீழ் நடத்தப்பட்டு வருகின்றன.

குறிப்பிட்ட காலா இடைவெளியில் பலகையைப் பேருந்துகள் மாற்றப்பட்டு புதிய பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.இருந்தாலும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இயக்கப்படும் அரசு பேருந்துகளின் நிலை மோசமாக இருக்கிறது.

மேலும் சேதமடைந்த பல அரசு பேருந்துகளால் தொடரும் விபத்துகள் தொடர்பான செய்திகள் கடந்த சில நாட்களாகவே வெளியாகி உள்ளன.கடந்த 15ஆம் தேதி விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில்  பேருந்தின் பின் பக்க படிக்கட்டு உடைந்து விழுந்தது.

சாலையின் நடுவே விழுந்த படிக்கட்டுகளை  ஓட்டுநரும், நடத்துனரும் எடுத்துச் சென்றனர்  காட்சிகள் இதனைத்தொடர்ந்து 3 நாட்களுக்கு முன்பு ஸ்ரீ ரங்கத்தில் இருந்து கே.கே.நகர் நோக்கிச் சென்ற அரசு பேருந்து வளைவில் திரும்பும்போது நடத்துனர் அமர்ந்திருந்த  இருக்கை கழண்டு சாலையில் விழுந்துள்ளது.

இதில் பேருந்து நடத்துனர் இருக்கையுடன் வெளியில் தூக்கி வீசப்பட்டார். நல்ல வேலையாக அவரது உயிருக்கு எந்த ஆபத்தும் இன்றி சிறு காயங்களுடன்  தப்பினார்.இந்த இரண்டு சம்பவமும் சமூக வலைத்தளங்களில் வைராகி வந்தன. விமர்சனத்திற்குள்ளானது.

இதையும் படிங்க: தமிழ்நாடு முழுவதும் ORS வழங்க உத்தரவு – சுகாதாரத்துறை!

அரசு பேருந்துகள் சேதம் மற்றும் விபத்துகள்  குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது விமர்சனங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
 தொடர்ந்து அரசு பேருந்துகள் சேதம் குறித்து செய்திகள் வந்த நிலையில் ஏப்ரல் 26 அன்று போக்குவரத்துக் கழக தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா போக்குவரத்துத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து  அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து பேருந்துகளையும் ஆய்வு செய்யா வேண்டும் என்றும் மேலும் இருக்கும்  பாதிப்புக்களை அடுத்த 48 மணி நேரத்திற்குள் சரி செய்ய வேண்டும் என்றும்  ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பான இறுதி அறிக்கையைப் போக்குவரத்துத் துறை செயலாளருக்கு விரைவில் சமர்ப்பிக்கவும்  போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
 


Spread the love
Exit mobile version