தெலங்கானாவில் உள்ள புகழ் பெற்ற திருப்பதி கோயிலில் வழங்கப்பட்டு வந்த லட்டு பிரசாதத்திலும் கலப்படம் செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
ஆந்திர மாநிலத்தில் உள்ள உலக பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டு வந்த லட்டுவில் கலப்படம் செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி தற்போது பல சர்ச்சைகளுக்கு உள்ளாகி வருகிறது.
இந்த பிரச்னை இன்னும் முடியாமல் முகைந்துகொண்டிருக்கும் நேரத்தில் தற்போது தெலங்கானாவில் உள்ள புகழ் பெற்ற திருப்பதி கோயிலில் வழங்கப்பட்டு வந்த லட்டு பிரசாதத்திலும் கலப்படம் செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
தெலங்கானாவின் திருப்பதி என்று அழைக்கப்படும் யதாத்ரி கோயில் லட்டு பிரசாதத்திலும் கலப்படம் இருக்கலாம் என சந்தேகம் தோன்றியுள்ள நிலையில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யை பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளது கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருப்பதி கோயிலில் லட்டு பிரசாதத்தில் மாட்டு கொழுப்பு கலக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்ததைத் தொடர்ந்து, ஆந்திராவில் உள்ள அனைத்து கோயில்களுக்கும் சென்று பிரசாதங்களின் மாதிரிகளை சேகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.