Site icon ITamilTv

ஈ.பி பில் கட்டாததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது – எச்சரிக்கை.. இது ஒரு மோசடி மெசேஜ்!!

Spread the love

உங்களுடைய மொபைல் போனிற்கு மின் கட்டணம் கட்டவில்லையென குறுஞ்செய்தி வந்தால் அந்த லிங்கை கிளிக் செய்ய வேண்டாம் எனவும், இது ஒரு மோசடி மெசேஜ் எனவும் தமிழ்நாடு மின்சார வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாளுக்கு நாள் முன்னேறிக்கொண்டே செல்லும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு இணையாக மோசடி சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், சமூக வலைதளத்தில் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பெயரில் போலியாக கணக்கு தொடங்கி பணம் பறித்து ஏமாற்றுதல், புகைப்படத்தை மார்பிங் செய்து பணம் கேட்டு மிரட்டுதல் போன்ற மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

இந்தநிலையில், தற்போது பொதுமக்களின் மொபைல் போனுக்கு வரும் குறுஞ்செய்தியில் உள்ள லிங்கை கிளிக் செய்தால், நமது வங்கி கணக்கில் இருக்கும் பணம் பறிபோகும் நிலை உருவாகியுள்ளது.

எனவே, உங்களுடைய மொபைல் போனிற்கு மின் கட்டணம் கட்டவில்லையென குறுஞ்செய்தி வந்தால் அந்த லிங்கை கிளிக் செய்ய வேண்டாம் என தமிழ்நாடு மின்சார வாரியம் எச்சரிக்கை பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் விடுதுள்ள எச்சரிக்கை பதிவில் தெரிவிதிருப்பதாவது..

ஈ.பி பில் கட்டாததால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என குறுஞ்செய்தி வந்தால் கவனம்!

  1. பதட்டம் அடைய வேண்டாம்
  2. உங்கள் பில் நிலைப்பாடு சரி பார்க்கவும்
  3. அந்த எண்ணை தொடர்பு கொள்ள வேண்டாம்
  4. இணைய லிங்கக்கை கிளிக் செய்ய வேண்டாம்
  5. உடனடியாக 1930 ஐ அழைத்து புகார் அளிக்கவும்
  6. உறவினர்கள், நண்பர்களுக்கு தகவலை பகிரவும்

இது ஒரு மோசடி மெசேஜ்! என தெரிவிக்கபட்டுள்ளது.


Spread the love
Exit mobile version