ஆளுநர் பதவியை பாஜக தலைவர் அன்னமாலைக்கு மாற்றி கொடுத்தால் அதில் அவர் சிறப்பாக செயல்படுவார் என திருநாவுக்கரசர் தெரிவித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதுல கலந்து கொண்டதிருநாவுக்கரசர் வரும் தேர்தல் பணிகள் குறித்து முக்கிய நிர்வாகிகள் உடன் ஆலோசனை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விமான நிலைய இயக்குனர் சுப்ரமணி மற்றும் குழு உறுப்பினர்கள்பலர் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், “திருச்சி விமான நிலையத்தில் புதிய முனையம் அமைக்கும் பணி ஜூன் மாதம் நிறைவடையும் என்று தெரிவித்துள்ளார்,மேலும் நேரு ஆட்சியில் இருந்து காங்கிரஸ் அரசு உருவாக்கிய பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்து வருகிறது இந்த மோடி அரசு என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழ் நாடு பெயர் மாற்றம் குறித்து செய்தியாளர் கேள்விக்கு ,தமிழக கவர்னர் ரவிக்கு அரசியல்வாதியாக பணியாற்றுவதற்கான அனைத்து தகுதிகளும் உள்ளன. பா.ஜ.க தலைவர் அண்ணாமலை நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக ஆர்.என். ரவியை தமிழக பாஜக தலைவராக்கலாம். பாஜக தலைவர் பதவியில் அவர் சிறப்பாக செயல்படுவார் எந்தரு தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாக்கள் முட்டுக்கட்டை போடப்பட்டுள்ளன. செய்ய வேண்டிய வேலையை செய்யாமல் மகாராஜா போல தனி மாநிலத்தை நடத்த முயல்வது தவறான முன்னுதாரணமாகும்.
மேலும் கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் அண்ணாமலை பத்திரிகையாளர்களை அத்துமீறி நடத்துவது வருத்தம் அளிக்கிறது. இதை பத்திரிகையாளர்கள் கண்டிக்க வேண்டும்.
ஜனநாயக நாட்டில் கேள்வி கேட்க பத்திரிகையாளர்களுக்கு உரிமை உள்ளது. மேலும் பத்திரிகையாளர்களை விமர்சிப்பதும்,தரக்குறைவாக நடத்துவதும் கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார்.