தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வரும் நிலையில் பள்ளிகளுக்கு மழைக்கால விடுமுறை அளிப்பதில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் என்னென்ன என்பதை இந்த செய்தித்தொகுப்பில் காணலாம்.
அதிக மழையோ, கனமழையோ பெய்தால் மட்டுமே பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும்.
- லேசான மழையோ, தூரலோ இருந்தால் விடுமுறை அறிவிக்க கூடாது.
- விடுமுறை குறித்த முடிவை, பள்ளி துவங்குவதற்கு மூன்று மணி நேரம் முன்னதாக எடுக்க வேண்டும்.
- மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்டம் முழுமைக்குமான மழை நிலவரம், பாதிப்பு நிலவரம், மழை நீர் தேங்கக் கூடிய பகுதிகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கையை அளிக்க வேண்டும்.
- பாதிக்கப்பட்ட பகுதியில் மட்டுமே விடுமுறை அறிவிக்க வேண்டும். மாவட்டம் முழுமைக்கும் தேவையில்லாமல் விடுமுறை அறிவிக்க கூடாது.
- மழைக்காலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கும் போது, அதனை ஈடு செய்யும் வகையில் சனிக்கிழமை போன்ற நாட்களில் வகுப்புகளை நடத்த வேண்டும்.
- விடுமுறை காரணமாக எந்த பாடங்களும் விடுபடாமல் மாணவர்களுக்கு முழுமையாக நடத்தி முடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
- பள்ளி வளாகங்களில் மழைநீர் தேங்கி இருந்தால், அவற்றை அப்புறப்படுத்துவதற்கும், மாணவர்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளித்தும் பள்ளிகள் செயல்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் அணைத்து மாவட்டங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது