Site icon ITamilTv

Vijay politics-”சாதி, மத பிளவுகளுக்கு..” திருமாவளவன் கொடுத்த அட்வைஸ்!

Vijay politics

Vijay politics

Spread the love

Vijay politics –அரசியலில் சாதி, மத பிளவுகளுக்கு அப்பாற்பட்டு கட்சியின் நிலைப்பாட்டில் விஜய் உறுதியான கட்சியாகச் செயல்பட வேண்டும் என திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான வலம் வரும் நடிகர் விஜய் “தமிழக வெற்றி கழகம்” என்ற கட்சியை தொடங்கியுள்ளார்.

ரசிகர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பான அரசியல் வருகையை பிப்ரவரி 2 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக விஜய் அறிவித்து,அறிக்கை ஒன்றையும் வெளியீட்டு இருந்தார் .

அந்த அறிக்கையில், “தற்போதைய அரசியல் சூழல் எப்படி இருக்கிறது என்றால், நிர்வாக சீர்கேடுகள், ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரம்,

சாதி மத பேதங்கள் வாயிலாக பிளவுபடுத்த துடிக்கும் பிளவுவாத அரசியல் கலாச்சாரம் என கடுமையாக சாடியுள்ளார்.

தமிழ்நாட்டின் மாநில உரிமைகள் சார்ந்து இந்த மண்ணுக்கேற்ற பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிற சமத்துவ கொள்கை பற்று உடையதாகவும் இருக்க வேண்டும்.

அத்தகைய அடிப்படை அரசியல் மாற்றத்தை மக்களின் ஏகோபித்த அபிமானமும் அன்பும் பெற்ற முதன்மையான ஒரு மக்கள் சக்தியால் தான் சாத்தியபடுத்த முடியும்.

இதையும் படிங்க : KPY Bala-”அவரு யோசிக்காம..” விஜய்யின் அரசியல் பயணம் குறித்து KPY பாலா ‘நச்’ பதில்!

என்னுடைய தாய், தந்தைக்கு அடுத்து எனக்கு பெயர், புகழ் மற்றும் எல்லாமும் கொடுத்த தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ் சமுதாயத்திற்கும் என்னால் முடிந்த வரையில் இன்னும் முழுமையாக உதவ வேண்டும்.

என்பதே எனது நீண்ட கால எண்ணம் மற்றும் விருப்பமாகும். வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றத்திற்கும் வழிவகுப்பது தான் நமது இலக்கு என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்த நிலையில் அரசியலில் சாதி, மத பிளவுகளுக்கு அப்பாற்பட்ட கட்சி நிலைப்பாட்டில் விஜய் உறுதியான கட்சியாகச் செயல்பட வேண்டும் என திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.

மறைமலைநகரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உறுப்பினர் சேர்ப்பு முகாம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் இணையதள உறுப்பினர் சேர்ப்பு முகாமை தொடங்கி வைத்தார்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன்முன்னாள் பிரதமர் வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்தவர் அத்வானி.

இதையும் படிங்க :https://x.com/ITamilTVNews/status/1754402596742152586?s=20

மேலும், ஓபிசி மக்களுக்கு கல்வியிலும்,வேலை வாய்ப்பிலும் இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என வன்முறையைத் தூண்டியவர்.

ரதயாத்திரை என்ற பெயரால் ‘ரத்த யாத்திரை’ நடத்தியவர், பாபர் மசூதி இடிப்பதற்கு முழு முதற்காரணமாக இருந்தவர்

அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதை, ஜனநாயக சக்திகளால் ஏற்க முடியாது.

இந்தியாவில் மதச்சார்பின்மை கொள்கைக்கு,அரசியலமைப்பு சட்டத்தில் ஜனநாயக விழுமியங்களுக்கு மிகப்பெரும் ஆபத்தை ஏற்படுத்தியவர்.

அதற்கு எதிரான உளவியலைக் கட்டமைத்தவர் அத்வானி. அவருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் விஜய்யின் அரசியல் வருகை (Vijay politics) குறித்த கேள்விக்கு ,‘சாதி, மத பிளவுகளுக்கு அப்பாற்பட்ட கட்சியாக நிலைப்பாட்டில் உறுதியாக நின்று பணிபுரியட்டும்’ எனக் கூறி வாழ்த்துகளையும் தெரிவித்தார்.


Spread the love
Exit mobile version