ITamilTv

திருப்பதியில் பிரதான சாலைகளில் போக்குவரத்து முடக்கம்.. – மலைப்பாதை மூடல்..!

Spread the love

காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தெற்கு ஆந்திரா பகுதியில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. திருப்பதியில் பெய்த கனமழையால் பக்தர்கள் யாத்திரை செல்லும் பாதை மூடப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகத் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.

இதன் காரணமாகத் தமிழ்நாட்டில் தலைநகர் சென்னை, கடலூர், விழுப்புரம் உட்பட 16 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகத் தமிழ்நாட்டில் மட்டுமின்றி தெற்கு ஆந்திரா பகுதிகளிலும் கனமழை பெய்தது.

கனமழையால் சாலையோரம் ஒதுங்கி நிற்கும் மான்கள்

நேற்று முன் தினம் இரவு முதலே தெற்கு ஆந்திராவில் பல்வேறு பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது. குறிப்பாகத் திருப்பதி திருமலையில் கொட்டித்தீர்த்த கனமழையால் நகரம் முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்தது.

நகரின் முக்கிய சாலைகளிலான யுனிவர்சிட்டி சாலை, ஏர் பை பாஸ் சாலை ஆகிய சாலைகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தொடர்ந்து கொட்டித்தீர்த்த கனமழையால் திருப்பதி மலைக்குப் பாத யாத்திரையாகச் செல்ல பயன்படுத்தப்படும் மலைப் பாதை நேற்று மூடப்பட்டது.

சாலை போக்குவரத்து மட்டும் இருந்த நிலையில், தொடர் மழை காரணமாக மலைப்பாதையில் பாறை சரிவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதால் திருப்பதி – திருமலை இடையேயான சாலை போக்குவரத்தும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. திருமலை – திருப்பதி இடையேயான சாலை போக்குவரத்து குறித்து பிறகு அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பல பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. மேலும், பல்வேறு இடங்களில் முக்கிய சாலைகளில் மரங்களும் முறிந்து விழுந்துள்ள நிலையில், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தைச் சந்தித்துள்ளனர்.

ரோட்டில் விழுந்து கிடக்கும் மரங்களை அகற்றும் பணிகள் ஒரு புறம் நடந்து கொண்டிருக்க, தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே திருப்பதியில் பல இடங்களில் சாலைகளே தெரியாத அளவுக்கு வெள்ள நீர் சூழ்ந்துள்ள படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும், சில இடங்களில் சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் மழை வெள்ளத்தால் அடித்துச் செல்லப்படும் காணொலிகள் வெளியாகியுள்ளது.


Spread the love
Exit mobile version