ITamilTv

திருத்தணி கோயிலுக்கு மலைப்பாதையில் செல்ல அனுமதியில்லை – கோயில் நிர்வாகம்

Spread the love

மண்சரிவு காரணமாக திருத்தணி முருகன் கோயில் மலைப்பாதையில் பக்தர்கள் நடந்து செல்ல அனுமதி இல்லை என்ன கோயில் நிர்வாகம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தியில் :

திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலுக்குச் செல்லும் மலைப்பாதையின் தடுப்புச் சுவர் மிக்தாம் புயல் காரணமாக மலைச்சரிவு ஏற்பட்டுள்ளதால் அதனை சீரமைக்கும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது? இதனால் பக்தர்கள் மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு நலன் கருதி தற்காலிகமாக அனைத்து ரக வாகனங்கள் செல்ல 11.12.2023 முதல்- 16.12.2023 வரை தடைவிதிக்கப்பட்டு மலைப்பாதை மற்றும் படிவழியில் நடந்து செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது மலைப்பாதை சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதால் இலேசாக மண் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே. பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி மலைப்பாதையில் நடந்து செல்வதற்கு அனுமதியில்லை. 14.12.2023 முதல் 20:12:2023 வரை பக்தர்கள் மலைக்கோயிலுக்கு செல்ல படிவழியினை மட்டுமே ‘பயன்படுத்திக்கொள்ள திருக்கோயில் நிர்வாகத்தால் கேட்டுக் கொள்ளப்படுகிறது.


Spread the love
Exit mobile version