ITamilTv

நள்ளிரவில் மல்லிகை பூ வாசம், கொலுசு சத்தம்..கேமராவில் பதிவான ஆவி..?

Spread the love

திருவள்ளூரில், ஆவி (ghost fear) வீதிகளில் உலாவுவது கேமராவில் பதிவாகி இருப்பதாக தகவல் பரவிய நிலையில், கிராமமே அதிர்ச்சியில் உறைந்து போனது.

திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் பெரிய காலனி பகுதியில் மல்லிகா என்ற பெண் வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த 24-ம் தேதி திருவள்ளூர் ரயில் நிலையத்தில் ரயிலுக்குள் தவறி விழுந்து உயிரிழந்து விட்டார்.

இதனையடுத்து, மல்லிகாவின் உடலை அடக்கம் செய்தனர். அதன் பிறகு இரண்டு நாட்களாக நடந்த சம்பவங்கள் கிராம மக்களை தூக்கம் இல்லாமல் அலையச் செய்துள்ளது.

ரயிலில் அடிபட்டு உயிரிழந்த மல்லிகாவின் எதிர் வீட்டில் ராபர்ட் என்ற நபர் வசித்து வருகிறார். இந்நிலையில், ராபர்ட்டின் வீட்டில் பொருத்தியுள்ள சிசிடிவியில் நிழல் போன்ற கருப்பு நிற உருவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இதனையடுத்து, மல்லிகாவின் ஆவி (ghost fear) வீதிகளில் உலாவுவது கேமராவில் பதிவாகி இருப்பதாக தகவல் பரவிய நிலையில், கிராமமே அதிர்ச்சியில் உறைந்து போனது. மேலும், மல்லிகாவின் வீட்டிற்குள் இருந்து வெளிவரும் கருப்பு நிற நிழல் போன்ற உருவம், அந்த தெருவை சுற்றி சுற்றி வருகிறது என்றும் தகவல் பரவியது.

ghost fear

இதனையடுத்து, அந்த தெருவில் அடிக்கடி மல்லிகை பூ வாசனை வருவதாகவும், கூடவே ஜல் ஜல் என கொலுசு சத்தமும் கேட்பதாகவும் சிலர் கொளுத்தி போட்டனர். மேலும், நள்ளிரவில் யாரோ செருப்பு அணிந்து நடக்கும் சத்தமும், கூடவே அழுவது போன்ற ஒப்பாரி சத்தமும் கேட்பதாக பீதியைக் கிளப்பி விட்டனர்.

மேலும், பொதுமக்களோடு நிற்காமல் இந்த வதந்தி திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என ஒட்டுமொத்த மாவட்ட அதிகாரிகளின் காதுகளுக்கும் செல்ல இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால், ராபர்ட் என்பவர் தனது வீட்டில் பொருத்தி இருந்த சிசிடிவி கேமரா மீது சிலந்தி வலை கட்டியிருந்ததே பேய் நடமாட்டம் போல காட்சியளிக்க காரணம் என்பது தற்போது தெரியவந்துள்ள நிலையில், ஆத்திரமடைந்த கிராம மக்கள் சிசிடிவி காட்சிகளை தவறாக பரவ விட்டது குறித்து ராபர்ட் மீது தங்களது கோபத்தை காட்டி வருகின்றனர்.


Spread the love
Exit mobile version