மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் சுவாமி சேர்வைக்கார மண்டகப்படியில் எழுந்தருளும் போது மண்டகப்படிதாரர்களுக்கு உரிய மரியாதை அளிக்க கோரி நாமம் போட்டபடி சங்கு ஊதியபடி கோவில் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா ஆறாம் நாள் நிகழ்ச்சியாக மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் மருதிருவரால் கட்டப்பட்ட சேர்வைகாரர் மண்டகபடியில் எழுந்தருளி சைவ சமய லிலை வரலாற்று நிகழ்வை நடைபெறும்.
இந்த நிலையில் சில ஆண்டுகளாக மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்படும் அழைப்பிதழ்களில் சேர்வைக்கார மண்டகப்படி என்பதற்கு பதிலாக சிவகங்கை ராஜா மண்டகப்படி என்ற பெயர் அச்சிடப்படுகிறது.
மேலும் சுவாமியும் அம்மனும் எழுந்தருளும் போது உரிய மண்டக படிதாரர்களுக்கு மரியாதை வழங்காமல் மாற்று நபர்களுக்கு வழங்கப்படுவதாக கூறி கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு அமைப்பினரும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் மருதிருவர் மக்கள் களம் என்ற அமைப்பினர் கோவில் முன்பாக கோவில் நிர்வாகத்தை கண்டித்து நெற்றியில் நாமம் அணிந்தபடியும் சங்கு ஊதிய படியும் நூதனமாக முறையில் வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது கோவில் நிர்வாகத்தை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர் மேலும் கைகளில் கோவில் நிர்வாகத்தை கண்டித்தும் கோரிக்கைகளை வலியுறுத்தியும் கண்டன பதாகைகளை ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்ட பொழுது காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
அப்பொழுது காவல்துறையினருக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
தொடர்ச்சியாக இதே கோரிக்கை வலியுறுத்தி வேறு யாரேனும் போராட்டத்தில் ஈடுபட்டு விடக்கூடாது என்பதற்காக தற்போது காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்