ITamilTv

”திருப்பதி செல்லும் மக்களுக்கு ஓர் அறிவிப்பு..” நாளை Special Buses..முழு விவரம்..!!

Spread the love

திருப்பதி இரண்டு முறை பிரம்மோற்சவ திருவிழாவை ஒட்டி, பக்தர்கள் வசதிக்காக தமிழகத்திலிருந்து திருப்பதிக்கு நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

பிரம்மோற்சவம் :

திருமலைக்கு வந்த வெங்கடேஷ்வர சுவாமிக்கு ஆண்டுதோறும் நடக்கும் உற்சவங்களை பிரம்ம தேவர் தான் வகுத்தார். பிரம்மோற்சவம் என்பது பிரம்ம தேவரே நடத்தும் விழாவாக கருதப்படுகிறது. பிரம்மோற்சவத்தின் போது காலை மற்றும் மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் மலையப்ப சுவாமி எழுந்தருளி மாட வீதிகளில் உலா வந்து அருள் செய்வார். திருமலை திருப்பதியில் கிட்டதட்ட 1000 ஆண்டுகளுக்கு மேலாக பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது.

பிரம்மோற்சவம் நடைபெறும் தேதி :

அந்த வகையில் திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2 வது பிரம்மோற்சவ விழா நவராத்திரி பிரம்மோற்சவம் அக்டோபர் 15 – ம் தேதி தொடங்கி 23 – ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த வைபவத்தில் 19 – ம் தேதி கருட சேவையும், 22 -ம் தேதி சுவர்ண ரதமும், 23 -ம் தேதி தீர்த்த வாரியும் நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த நிலையில் ,திருப்பதி பிரம்மோற்சவ திருவிழாவை ஒட்டி, பக்தர்கள் வசதிக்காக தமிழகத்திலிருந்து திருப்பதிக்கு நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

இது குறித்து சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்..

2023-ல் திருப்பதி, திருமலையில் இரண்டு முறை “பிரம்மோத்ஸவம்” திருவிழா நடைபெற உள்ளது. இத்திருவிழாவினை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் வாயிலாக சிறப்பு பேருந்துகள் இயக்கம் அறிவித்துள்ளது.

இந்த வருடம் 2023-ல் திருப்பதி, திருமலையில் இரண்டாவது முறையாக நடைபெற உள்ள “பிரம்மோத்ஸவம்” திருவிழாவினை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சென்னை, திருச்சி, தஞ்சாவூர், சேலம், கோயம்புத்தூர், மதுரை, காரைக்குடி, கும்பகோணம் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களிலிருந்து திருப்பதிக்கு வரும் 13/10/2023 முதல் 26/10/2023 வரை சிறப்பு பேருந்துகள் இயக்க உள்ளது.

மேற்கூறிய இடங்களிலிருந்து இயக்கப்படும் பேருந்துகளுக்கு முன்பதிவு வசதியும் செய்யப்பட்டுள்ளது. இந்த சேவையை பக்தர்கள் முழுமையாக பயன்படுத்தி பயணம் மேற்கொள்ள www.tnstc.in tnstc official app மூலம் முன்பதிவு செய்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளது.


Spread the love
Exit mobile version