தமிழகம்(tamil nadu) மட்டுமின்றி குஜராத் ,கர்நாடகா காவல்துறையினரால் பாலியல் குற்றங்கள் மற்றும் நில ஆக்கிரமிப்பு வழக்குகளில் தேடப்படும் சாமியார் நித்தியானந்தா(Nithiyananthaa). இவர் வெளிநாட்டிற்கு தப்பி ஓடிய நிலையில் கைலாச என்ற நாட்டை உருவாக்கி தனது சிஷியர்களுடன் ஆனந்தமாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் உல்லாசமாக தினந்தோறும் வீடியோக்களை பதிவிட்டு அவருடைய பக்தர்கள் மத்தியில் உரையாற்றி வந்து கொண்டு இருக்கிறார்.
இந்த நிலையில் நித்யானந்தா(nithiyananthaa) போன்று உடை, அணிகலன்கள் ,பாவனை தோற்றத்தை திருப்பூர் மாவட்டத்தில் உலா வந்து கொண்டு இருக்கிறார்.இந்த நிலையில் ,நித்தியானந்தா என நினைத்து தன் ஆசிரமத்தை வங்கி அதிகாரிகாரிகள் இடித்துவிட்டதாக பல்லடம் காவல்நிலையத்தில் சுவாமி பாஸ்கரானந்தா புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் ,செல்வபுரத்தை பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரானந்தா(bhaskaranandha) .இவர் நித்தியானந்தாவை போன்று தமிழ்நாடு மட்டுமின்றி நாட்டின் பல்வேறு இடங்களுக்கு சென்று ஆன்மீக பணி மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கரணம்பேட்டை அருகே செல்வகுமார் என்பவருக்கு சொந்தமான இடத்தில் ஆசிரமம் அமைக்க சுமார் ரூ. 1.5 கோடி வரை முன்பணமாக கொடுத்து கடந்த 2018ஆம் ஆண்டு 5 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்தார்.
இந்நிலையில் கடந்த வாரம் அந்த இடத்தில் கட்டப்பட்டுவந்த ஆசிரமத்தில் உள்ள தனது அறையில் இருந்த 25 சவரன் தங்க நகைகள் காணாமல் போனதாக பல்லடம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் பாஸ்கரானந்தா(bhaskaranandha) புகார் மனு அளித்திருந்தார்.
அதில் ஆசிரம கட்டிடங்கள் முழுவதுமாக இடிக்கப்பட்டதாக வெளியூரில் இருந்த பாஸ்கரானந்தாவிற்கு தகவல் அளிக்கப்பட்டது.இந்நிலையில் ஆன்மிக யாத்திரையில் ஈடுபட்டு இருந்த பாஸ்கரானந்தாவிற்கு அதிர்ச்சி அடைந்தார்.இதனை தொடர்ந்து தகவல் அறிந்து வந்த பாஸ்கரானந்தா பல்லடம் காவல்நிலையத்திற்கு தனது பக்தர்களுடன் நேரில் வந்து ஆசிரமத்தை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு அளித்தார்.