ITamilTv

திருவண்ணாமலை : மலை உச்சிக்கு எடுத்துச் செல்லப்பட்ட மகா தீபக் கொப்பரை!!

Spread the love

திருவண்ணாமலையில் நாளை தீபத்திருவிழா ஏற்றப்படும் நிலையில், மகா தீப கொப்பரை மலை உச்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கடந்த 17ஆம் தேதி கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கார்த்திகை தீப திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக நாளை அதிகாலை 4 மணியளவில் பரணி தீபமும், மாலை 6 மணி அளவில் 2 ஆயிரத்து 668 அடி உயரம் கொண்ட மலை மீது மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.

இதற்காக ஐந்தே முக்கால் அடி உயரம் கொண்ட செப்பு கொப்பரை தயார் செய்யப்பட்டுள்ளது.

கிளி கோபுரம் அருகே அண்ணாமலையார் கோயில் சார்பில் செப்பு கொப்பரைக்கு வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

அதன் பிறகு ஊழியர்கள் இருபதுக்கும் மேற்பட்டோர் தங்கள் தோளில் சுமந்து மலை மீது கொப்பரையை ஏற்றும் பணி தொடங்கியது.

சுமார் 4,500 கிலோ நெய் மற்றும் 1,500 மீட்டர் காடா துணியும் மலை மீது கொண்டு செல்லப்பட்டது


Spread the love
Exit mobile version