Site icon ITamilTv

”சாலை போடும் பணிக்கான பூமி பூஜை..” கொட்டும் மழையில் அமைச்சர் செய்த நெகிழ்ச்சி!!

Spread the love

திருநெல்லிக்காவல் நெல்லிவன நாதர் ஆலய தேரோடும் வீதிகளில் ஒரு கோடியே 52,70,000 ரூபாய் மதிப்பில் சாலை போடும் பணிக்கான பூமி பூஜையில்(bhoomi pooja) கொட்டும் மழையிலும் குடை பிடித்தபடி கலந்து கொண்ட சட்டமன்ற உறுப்பினர் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட திருநெல்லிக்காவல் ஊராட்சியில் ஸ்ரீ நெல்லிவன நாதர் ஆலயம் அமைந்துள்ளது.பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தின் தேர் தேர்த்திருவிழா சுமார் 80 ண்டுகளுக்கு முன்பு தேரின் அச்சாணி உடைந்த காரணத்தினால் தடைப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கடந்த 2020-21 ம் நிதியாண்டி திரை புதுப்பிக்க இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 28 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு தற்போது 95 சதவீத பணிகள் முடிந்து தயாராக இருக்கின்றது.

இந்த நிலையில் தேரோடும் வீதிகளான ஆலயத்தை சுற்றி உள்ள சிவன் கோவில் கிழக்கு தெரு வடக்கு தெரு மேற்கு தெரு ஆகியவற்றின் சாலை 12 அடி மட்டுமே அகலம் இருப்பதால் 24 அடி அகல சாலை தேரோடுவதற்கு தேவைப்படுகின்ற காரணத்தினால் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்திற்கு கீழ் ஒரு கோடியே 52 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைப்பதற்கான நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பூமி பூஜை கோவிலுக்கு எதிரில் நடைபெற்றது.

இதில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் குடை பிடித்தபடி திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் கலந்து கொண்டார். அவருடன் கூடுதல் ஆட்சியர் பிரியங்கா கோட்டூர் ஒன்றிய பெருந்தலைவர் மணிமேகலை முருகேசன் கோவில் செயல் அலுவலர் சிங்காரவேல் ஊராட்சி மன்றத் தலைவர் மாரியம்மாள் பாக்கியராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Spread the love
Exit mobile version