Site icon ITamilTv

உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு – முதல்வர் உள்பட தலைவர்கள் வாழ்த்து..!!

mariyappan gold

mariyappan gold

Spread the love

ஜப்பானில் நடைபெற்று வரும் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கம் ( mariyappan gold ) வென்று அசத்தியுள்ள தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்பட ஏராளமானோர் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர் .

மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் பங்கேற்கும் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் தொடர் ஜப்பான் நாட்டில் கடந்த 17-ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இந்த மாபெரும் தொடரில் இந்தியா உட்பட பல்வேறு உலக நாடுகளை சேர்ந்த சுமார் 1,300 பாரா தடகள வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

இதில் உயரம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்ற தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு 1.88 மீட்டர் உயரம் தாண்டி மாபெரும் சாதனை படைத்து தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார் .

Also Read : சர்ச்சையை கிளப்பிய வீடியோ – யூடியூபர் இர்பானுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை நோட்டீஸ்..!!

தங்கம் வென்ற தங்கமகன் மாரியப்பன் தங்கவேலுக்கு தற்போது ஏராளமான அரசியல் தலைவர்கள் திரை பிரபலங்கள் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் தற்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாரியப்பன் தங்கவேலுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் மிகப்பெரிய வெற்றியடைய மாரியப்பன் தங்கவேலுவை வாழ்த்துகிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதேபோல் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறிருப்பதாவது :

ஜப்பானில் நடைபெற்ற உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ( mariyappan gold ) ஆடவர் உயரம் தாண்டுதல் T63 இறுதிப் போட்டியில் 1.88 மீட்டர் தாண்டி சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு மனமார்ந்த வாழ்த்துக்கள் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


Spread the love
Exit mobile version