Site icon ITamilTv

”ரூ.463 கோடி மதிப்பீட்டில் 71 கட்டடங்கள்” – திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்..!

TN CM

TN CM

Spread the love

TN CM | மயிலாடுதுரை மாவட்டத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு தமிழகத்தின் 38 வது மாவட்டமாக மயிலாடுதுறை அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மயிலாடுதுறையில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட மன்னம்பந்தல் ஊராட்சி மூங்கில்தோட்டம் பகுதியில், 13 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது.

இதில் ரூ.114 கோடியே 48 லட்சம் மதிப்பில் தரைத்தளம் மற்றும் 7 தளங்கள் கொண்ட புதிய கட்டிடம் கட்டப்பட்டு வந்தது.

அந்த வகையில் இன்று காலை மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிய மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார்.

இதையும் படிங்க: ”TNPSC Group-4 விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய..” முழு விவரம் உள்ளே..

இதனை தொடர்ந்து மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

மேலும், பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி விழாப் பேருரையாற்றுகிறார்.

அதனை தொடர்ந்து நாகை மாவட்டத்தில் 700 படுக்கைகளுடன் ரூ.254 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவமனை, மயிலாடுதுறையில் ரூ.3 கோடியே 8 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மருத்துவ கட்டமைப்பு,

1.திருவாரூர் மாவட்டத்தில் ரூ.4 கோடியே 32 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மருத்துவ கட்டமைப்புகள், நாகூர் பகுதியில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் மருத்துவமனை கட்டமைப்பு,

இதையும் படிங்க:https://x.com/ITamilTVNews/status/1764539849602998591?s=20

2.குற்றாலம் பகுதியில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மருத்துவ கட்டமைப்புகளையும் திறந்து வைத்தார்.

3.அதுமட்டுமின்றி புதிய திட்டப்பணிகளுக்காக அடிக்கல் நாட்டுகிறார். மேலும், பல்வேறு துறைகளை சேர்ந்த பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.

இதற்காக நேற்று சென்னை எழும்பூரில் இருந்து திருச்செந்தூர் விரைவு ரயில் மூலம் தமிழக முதலமைச்சர் முகஸ்டாலின் சீர்காழி வந்தடைந்தார். அங்கு அவருக்கு அதிகாரிகள் தரப்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

முதல்-அமைச்சர் (TN CM) வருகையையொட்டி தஞ்சை சரக டி.ஐ.ஜி ஜியாவுல் ஹக் மேற்பார்வையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மீனா தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Spread the love
Exit mobile version