Site icon ITamilTv

₹1000 உங்களுக்கு வரவில்லையா..? இதை பாருங்க.. ஈஸியா தெரிஞ்சுக்கலாம்!!

Spread the love

மகளிா் உரிமைத் தொகை(Magalir Urimai Thogai) திட்டத்தின் கீழ், 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தை செப்.15-ஆம் தேதி காஞ்சிபுரத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.

விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவா்களுக்கு அதற்கான காரணத்தைத் தெரிவித்து கைப்பேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பும் பணி தொடங்கியுள்ளது.

விண்ணப்பதாரா்களின் கைப்பேசிக்கு குறுஞ்செய்தி வராதபட்சத்தில் மாற்று ஏற்பாட்டின் மூலமாக நிராகரிப்புக்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.

இதற்கென தனி இணையதளத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது. பொதுமக்கள் தங்களது ஆதாா் எண்ணையும், கைப்பேசி எண்ணையும் உள்ளீடு செய்ய வேண்டும்.ஆதாரில் இணைக்கப்பட்ட கைப்பேசி எண்ணுக்கு ஒருமுறை பயன்படுத்தும் கடவு எண் வரும்.

இதை உள்ளீடு செய்தால், விண்ணப்பம் ஏற்கப்படாததற்கான காரணம் திரையில் தெரியவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை ரூ.1,000 கிடைக்கப் பெறாதவர்கள் www.kmut.tn.gov,in என்ற இணையதளத்தில் சர்பார்க்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உரிமைத் தொகை திட்டத்தில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வரும் நோக்கில் இந்த தனி இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட நாளில் இருந்து 30 நாள்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம்.

மேல்முறையீட்டு விண்ணப்பங்களை வருவாய்க் கோட்டாட்சியா்கள் 30 நாள்களுக்குள் முடித்து வைப்பா் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.


Spread the love
Exit mobile version