AP minister roja-ஆந்திர மாநிலம் சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் போட்டியிடும் அம் மாநிலத்தின் சுற்றுலாத்துறை அமைச்சர், ரோஜா தனது வேட்ப மனுவை திருத்தணி முருகன் சன்னதியில் வைத்து சிறப்பு பூஜை செய்தார்.
2024 ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல் 13 மே 2024 அன்று நடைபெற உள்ளது.இந்த தேர்தலில் , மாநில சட்டப் பேரவையின் 175 சட்டப் பேரவை உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கப்பட உள்ளது.
தேர்தல் நிகழ்வுகள்:
அறிவிக்கப்பட்ட தேதி -16 மார்ச் 2024
அறிவிப்பு தேதி – 18 ஏப்ரல் 2024
வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி – 25 ஏப்ரல் 2024
வேட்புமனு பரிசீலனை – 26 ஏப்ரல் 2024
வேட்பு மனு திரும்பப் பெறும் இறுதி தேதி – 29 ஏப்ரல் 2024
வாக்குப்பதிவு தேதி -13 மே 2024
வாக்கு எண்ணிக்கை தேதி – 4 சூன் 2024 என்று அறிவிக்கப்பட்டுள்ளது .
இதையும் படிங்க: திருத்தணி கோயிலுக்கு மலைப்பாதையில் செல்ல அனுமதியில்லை – கோயில் நிர்வாகம்
இந்த நிலையில், மீண்டும் ஆந்திர மாநிலம் சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் போட்டியிடும் அம் மாநிலத்தின் சுற்றுலாத்துறை அமைச்சர், ரோஜா தனது வேட்ப மனுவை திருத்தணி முருகன் சன்னதியில் வைத்து சிறப்பு பூஜை செய்தார்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆந்திர மாநில சுற்றுலாத் துறை அமைச்சரும் பிரபல திரைப்பட நடிகையுமான ரோஜா தனது குடும்பத்துடன் திருத்தணி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
திருக்கோயில் சார்பில் அவருக்கு பிரசாதங்கள் மற்றும் மலர் மாலைகள் வழங்கப்பட்டன.ஆந்திர மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் கட்சியின் சார்பில் மீண்டும் நகரி தொகுதியில் ரோஜா போட்டியிடுகிறார். இன்று அந்த தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.
இதனை முன்னிட்டு வேட்பு மனுவை திருத்தணி முருகன் கோயில் மூலவர் முருகப்பெருமான் சன்னதியில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்தும் மற்றும் திருத்தணி முருகன் கோயிலில் உபயோகிலான செல்வ விநாயகர் திருக்கோயிலிலும் வேட்பு மனுவை வைத்து சிறப்பு பூஜைகள் செய்து அமைச்சர் ரோஜா எடுத்துச் சென்றார்.