Site icon ITamilTv

ஃபெஞ்சல் புயல் எதிரொலி – பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அறிவித்த தமிழ்நாடு அரசு..!!

storm affected people

storm affected people

Spread the love

ஃபெஞ்சல் புயல் மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு அரசு நிவாரணம் அறிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயலின் காரணமாக சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது . விடாது பெய்த கனமழையின் காரணமாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்தது . இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஃபெஞ்சல் புயல் மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு அரசு நிவாரணம் அறிவித்துள்ளது.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் மழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு தொகையாக 5 லட்சம் வழங்கப்படவுள்ளது.

Also Read : திருவண்ணாமலை மண்சரிவு – ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு..!!

சேதமடைந்த குடிசைகளுக்கு ₹10,000மும், முழுவதுமாக சேதமடைந்த குடிசைகளுக்கு கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் வீடு கட்ட முன்னுரிமை அளிக்கப்படவுள்ளது.

33% அல்லது அதற்கும் மேல் பாதிக்கப்பட்ட நெற்பயிர் உள்ளிட்ட இறவை பாசன பயிர்களுக்கு ஹெக்டேருக்கு 17,000 ரூபாய் நிவாரணம் வழங்கப்பட உள்ளது.

33% அல்லது அதற்கும் மேல் பாதிக்கப்பட்ட பல்லாண்டு பயிர்களுக்கு ஹெக்டேருக்கு 22,500 ரூபாய் நிவாரணம் வழங்கப்பட உள்ளது.

எருது, பசு உள்ளிட்ட கால்நடை உயிரிழப்புகளுக்கு 37,500 ரூபாய் நிவாரணம், வெள்ளாடு, செம்மறி ஆடுகளுக்கு 4,000மும், கோழிக்கு 100 ரூபாய்யும் வழங்கப்பட உள்ளது.


Spread the love
Exit mobile version