சென்னைக்கு முக்கிய குடிநீர் ஆகாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கத்தில் இருந்து விநாடிக்கு 1,000 கனஅடி நீர் திறந்து விடப்படுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செம்பரம்பாக்கம் மற்றும் சென்னை பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு குறுந்தகவல் அனுப்பி தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை மற்றும் அதனை சுத்தியுள்ள பகுதிகளில் தற்போது பரவலாக மழை பெய்து வருவதால் சென்னைக்கு முக்கிய குடிநீர் ஆகாரமாக விளங்கும் முக்கிய ஏரிகள் மளமளவென நிரம்பி வருகின்றன . நீர்வரத்து அதிகரிப்பால் இந்த சூழலில் வேறு வழியின்றி செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 200 கனஅடி நீர் திறக்கப்பட்டது.
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பு இன்று 1,000 கனஅடியாக உயர்ந்துள்ளது. நீர் வரத்து அதிகரிப்பால் வினாடிக்கு 200 கனஅடியில் இருந்து 1,000 கனஅடியாக நீர் வெளியேற்றப்படுகிறது.
இந்நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செம்பரம்பாக்கம் மற்றும் சென்னை பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு குறுந்தகவல் அனுப்பி தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.