ITamilTv

மணிப்பூர் கலவரத்தின் முதலாம் ஆண்டு இன்று ! – ப.சிதம்பரம் பகீர் ட்வீட்

PChidambaram ManipurViolence manipurburning

Spread the love

2023 மே 3 அன்று மணிப்பூரில் வெடித்த கலவரத்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

மணிப்பூரில் வசிக்கும் மெய்தி இனத்தவர் தங்களை பட்டியல் இனத்தில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்க்கு குகி பழங்குடி இன மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில் இந்த மோதல் வன்முறையாக மாறியது.இந்த வன்முறை சம்பவத்தால் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளார்.மேலும் 250க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில்,குகி பழங்குடியினத்தைச் சேர்ந்த 2 பெண்களை, சிலர் வன்கொடுமை செய்யப்பட்டு நிர்வாணமாக இழுத்துச் சென்ற வீடியோ தற்போது வெளியாகி நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையில் 32 வயதுடைய நபரை கைது செய்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவத்தில் 30க்கும் தொடர்புடையவர்களை தேடி வருகின்றனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி மணிப்பூர் சம்பவத்தில் குற்றவாளிகள் தப்பிக்க முடியாது என தெரிவித்து இருந்தார்.

இதனை தொடர்ந்து வன்முறையில் உயிரிழந்த 87 பேரின் சடலங்கள் பல மாதங்களுக்குப் பிறகு அம்மாநிலத்தின் சுராசந்த்பூரில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. செக்கனில் நடைபெற்ற அடக்கவிழாவில் கிராம பாதுகாப்பு தன்னார்வலர்களின் துப்பாக்கியின் குண்டுகள் முழங்க கிறிஸ்தவ முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது. அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு குகி- சோ தியாகிகளின் கல்லறை என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த நிலையல் 2023 மே 3 அன்று மணிப்பூரில் வெடித்த கலவரத்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,”

கடந்த 2023 ஆண்டு மே 3 அன்று மணிப்பூரில் வெடித்த கலவரத்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று. கடந்த பிப்ரவரி வரை சுமார் 219 பேர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். 60,000க்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர்.

இதையும் படிங்க: மணிப்பூர் தேர்தலில் துப்பாக்கி சூடு.. அலறியடித்து ஓடிய மக்கள்!

கலவரத்தின் போது ஏராளமான வீடுகள் இடிக்கப்பட்டன மற்றும் வழிபாட்டுத் தலங்கள் – தேவாலயங்கள் சேதப்படுத்தப்பட்டன. இந்த கலவரத்தால் மணிப்பூர் மாநிலம் இரண்டு பகுதிகளாக பிரிந்து கிடக்கிறது. ஆனால் மோடியின் ஒன்றிய அரசு மணிப்பூரின் திசையைப் பார்க்கவோ, வன்முறைக்குள்ளான மாநிலத்தில் அமைதியைக் கொண்டுவரவோ மறுத்து விட்டது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 355வது பிரிவு முடமாக உள்ளது. அரசியலமைப்பின் 356வது பிரிவு துருப்பிடித்து வருகிறது. திறமையற்ற, மதிப்பிழந்த பாஜக அரசாங்கம், பெருமை வாய்ந்த வரலாற்றைக் கொண்ட பெருமைமிக்க மாநிலத்தை வழிநடத்துகிறது.


Spread the love
Exit mobile version