Site icon ITamilTv

8ம் தேதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் Black Shirt.. TR.பாலு ஆர்டர்

TR.பாலு

TR.பாலு

Spread the love

TR.பாலு :மத்திய அரசை கண்டித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் காந்தி சிலை எதிரில் கருஞ்சட்டை அணிந்து போராட்டம் நடைபெறும் என டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

2023 டிசம்பர் மாதத்தில் தமிழ் நாட்டைப் புரட்டிப் போட்ட வரலாறு காணாத புயல் மழை வெள்ள சேதங்களை சரிசெய்யவும் நிவாரண உதவியாக வும் 37000 கோடி ரூபாய் தந்து உதவிட வேண்டும் என்ற தமிழ்நாடு அரசு கோரிக்கை பற்றி எந்த அறிவிப்பும் இல்லை.

அதைப் போல,மதுரை எய்ம்ஸ் உள்ளிட்ட தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கான உரிய நிதி ஓதுக்கீடு குறித்தும் இடைக்கால பட்ஜெட்டில் அறிவிப்புக்கள் இடம் பெறவில்லை.

இந்நிலையில், தமிழ்நாட்டுக்கு அன்னிய முதலீடு திரட்டும் நோக்கில் ஸ்பெயின் நாட்டில் பயணம் மேற்கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசை வன்மையாக

கண்டித்ததுடன் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் காந்தி சிலை எதிரில் கருஞ்சட்டை அணிந்து போராட்டம் நடத்துவர் என்றும் அறிவித்தார்.

இதையும் படிங்க :Tvk vijay-”விஜய் கட்சியின் பெயரில் திராவிடம் என்ற வார்த்தை இல்ல..”-அன்பில் மகேஸ்!

அதன்படி திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் 8.2.2024 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.

கடந்த 31.1.2024 அன்று குடியரசுத் தலைவர் வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரைத் துவக்கி வைத்து இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரை நிகழ்த்தினார்.

குடியரசு‌த் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நேற்று (2.2.2024) நடைபெற்றது.

அதில் கலந்து கொண்டு திமுக சார்பில் பேசிய திமுக நாடாளுமன்ற குழுத் தலைவரான டி. ஆர்.பாலு மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை குறித்து தனது கடும் கண்டனங்களை வெளியிட்டார்.

அதில், குடியரசு‌த் தலைவர் தனது உரையில் அரசின் கொள்கைகளையும் திட்டங்களையும் தான் எடுத்துக் கூறி உள்ளார்.

தனது சொந்த கருத்துக்கள் எதையும் சொல்ல வில்லை. அவரது உரை அரசு தயாரித்த உரை.

அதனை குடியரசுத் தலைவர் முர்மு அவர்கள் அச்சு பிறழாமல் கடைசி வார்த்தை வரை அப்படியே பேசி உள்ளார். அதுதான் மரபு.

இதையும் படிங்க :https://x.com/ITamilTVNews/status/1753713128536478050?s=20

அதற்காக திருமதி முர்மு அவர்களுக்கு நன்றி கூறியே ஆக வேண்டும். அதற்காக அவரது உரையில் பிரதிபலிக்கப் பட்டுள்ள,

திமுக வின் கொள்கை கோட்பாடுகட்கு எதிரான ஒன்றிய அரசின் கொள்கைகள் செயல்பாடுகள் அனைத்தையும் திமுக ஏற்பதாக பொருள் அல்ல.

குடியரசுத் தலைவரைப் போல் அல்லாமல் பல ஆளுநர்கள் குறிப்பாக தமிழ்நாடு ஆளுநர் மாநில அரசு கொடுத்த உரையில் இல்லாத விஷயங்களைப் பேசினார்.

சில ஆளுநர்கள் மாநில அரசு தங்கள் அரசு என்பதை மறந்து எதிர்க் கட்சித் தலைவர்களுடன் போட்டி போடும் வகையில் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதை

வழக்கமாகவே வைத்துள்ளனர் என்று TR.பாலு குறிப்பிட்டுள்ளார்.


Spread the love
Exit mobile version