Site icon ITamilTv

Traffic violation – வீடு தேடி வரும் அபராதம்

Traffic violation

Traffic violation

Spread the love

போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளின் (Traffic violation) வீடுகளுக்கே சென்று அபராத ரசீது கொடுக்கும் திட்டம் அமல் படுத்தப்பட்டுள்ளது.

வந்தாரை வாழவைக்கும் நம்ப சிங்கார சென்னையில், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு, போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர்.

கண்காணிப்பு கேமரா பதிவுகளை கண்காணித்தும் விதி மீறப்பட்டிருந்தால் கட்டாயம் அபராதம் விதிக்கப்படுகிறது.

இதுகுறித்து, விதிமீறலில் ஈடுபடுவோரின் மொபைல் போன் எண்ணிற்கு, போலீசார் உடனுக்குடன் தகவல் அனுப்புகின்றனர்.

அபராதம் விதிக்கப்படும் அதனை முறையாக கட்டத் தவறினால், தமிழக காவல் துரையின் கால்சென்டர் வாயிலாக வாகன ஓட்டிகளுக்கு நினைவூட்டப்பட்டு வருகிறது .

இந்நிலையில் இந்த திட்டத்தின் அடுத்த கட்டமாக, விதிமீறலில் ஈடுபடுவோரின் வீட்டிற்கே சென்று, அபராத ரசீது கொடுக்கும் திட்டத்தை, போக்குவரத்து போலீசார் துவங்கி உள்ளனர் .

முதற்கட்டமாக தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் மட்டும் சோதனை ரீதியாக இந்த நடைமுறை துவக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் குறித்து தமிழ்நாடு போக்குவரத்து போலீசார் கூறியதாவது :

வீடு தேடிச் சென்று அபராத ரசீது தருவதில், பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன.

இதை, எந்த வகையில் சரியாக செயல்படுத்த முடிகிறது என்பதை பார்த்து, மாநிலம் முழுதும் இந்த திட்டத்தை முறையாக விரிவுபடுத்த முயற்சிகள் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

இது நாள் வரை போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து அபராதத்தை காட்டாமல் எஸ்கேப் வகை வந்த வாகன ஓட்டிகள் பலருக்கும் இந்த திட்டம் கடும் அதிர்ச்சியாக இருக்கும்.

இதுமட்டுமின்றி வீடு தேடி வந்து அபராத ரசீது கொடுப்பது சரியல்ல என்றும் இதுபோன்று செய்தால் அவ மரியாதையாக இருக்கும் எனவும் சில கருத்துக்கள் இணையத்தில் உலா வருகிறது.

ஆனால் அப்படியே மறுபக்கம் இதுபோன்று கடுமையான முயற்சிகளை காவல்துறை எடுத்திருப்பது பாராட்டிற்குரியது என்று பலர் தெரிவித்துள்ளனர்.

Also Read : https://itamiltv.com/pmintn-prime-minister-arrived-in-tamil-nadu/

இந்த திட்டத்தின் மூலம் வாகன ஓட்டிகளுக்கு ஒரு பயம் இருக்கும் என்றும் இதனால் வாகனத்தை முறையாக ஓட்டுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

இந்த திட்டத்தை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் (Traffic violation) என்பதை எங்களுடன் கமெண்டில் பகிருங்கள்…


Spread the love
Exit mobile version