ITamilTv

சென்னை – தூத்துக்குடி இடையே ரயில் போக்குவரத்து மீண்டும் தொடக்கம்..!!

Spread the love

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக ரயில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மீண்டும் சென்னை – தூத்துக்குடி இடையே ரயில் போக்குவரத்து தொடக்கி உள்ளது.

தூத்துக்குடி, திருநெல்வேலி தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 தென்மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த வரலாறு காணாத பேய் மழையின் காரணமாக பல குடியிருப்பு பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த பேரிடரின் போது பொது போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டு பல பகுதிகள் தனி தீவாக மாறியது,அதிலும் குறிப்பாக இந்த பெரு வெள்ளத்தில் சிக்கி தவித்த கர்ப்பிணி பெண்கள் மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் தவித்த நிலையில் மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையால் உரிய நேரத்தில் மீட்கப்பட்டு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டனர் .

வரலாறு காணாத இந்த கனமழையால் பல ரயில் நிலையங்களில் வெள்ளம் சூழ்ந்ததால் ரயில் போக்குவரத்தும் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டது . இந்நிலையில் மழை சற்று ஓய்ந்து வெள்ளமும் வடிய தொடங்கிய நிலையில் சுமார் 4 நாட்களுக்கு பிறகு சென்னை – தூத்துக்குடி இடையே ரயில் போக்குவரத்து இன்று மீண்டும் தொடங்கி உள்ளது .

நேற்றிரவு சென்னையில் இருந்து புறப்பட்ட முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் காலை 6.15 மணியளவில் தூத்துக்குடி சென்றடைந்தது. சென்னை – தூத்துக்குடி இடையே 4 நாட்களுக்கு பிறகு ரயில் போக்குவரத்து தொடங்கியதால் பயணிகள் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளனர் .


Spread the love
Exit mobile version