ITamilTv

திருச்சி சர்வதேச விமான நிலைய புதிய முனையம் இன்று முதல் பயன்பாட்டிற்கு வந்தது!

Trichy International Airport's new terminal

Spread the love

Trichy International Airport’s new terminal : திருச்சி சர்வதேச விமான நிலைய புதிய முனையம் காலை முதல் பயன்பாட்டிற்கு வந்தது – விமான நிலைய இயக்குனர் பயணிகளுக்கு பூச்செண்டு கொடுத்து வரவேற்றார்.

திருச்சி சர்வதேச விமான நிலைய புதிய முனையத்தை கடந்த ஜனவரி 2 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். அந்த விமான நிலைய முனையம் இன்று காலை முதல் செயல்பாட்டிற்கு வந்தது.

திருச்சியில் கட்டப்பட்டுள்ள விமான நிலைய புதிய முனையம் இன்று காலை 6மணி முதல் அனைத்து விமானங்களும் புதிய முனையத்தில் இயக்கப்படுகிறது. பயணிகள் அனைவரும் புதிய முனையத்தை பயன்படுத்த துவங்கியுள்ளனர்.

உள்நாட்டு, வெளிநாட்டு விமான சேவைகள் அனைத்தும் புதிய முனையத்தில் தான் செயல்படும்.

75 ஆயிரம் சதுர மீட்டரில் கட்டப்பட்டுள்ள புதிய முனையத்தில் ஆண்டுக்கு 44.50லட்சம் பயணிகளை கையாள முடியும். ஒரு மணி நேரத்திற்கு 3480 பயணிகளை கையாளும் திறன் கொண்டதாக புதிய விமான நிலையம் இருக்கிறது.

இதையும் படிங்க : June 11 Gold Rate : மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை!!

புதிய முனையத்தில் 104இமிகிரேசன் கவுண்டர்கள் உள்ளது. பயணிகளுக்கும், பயணிகளுடன் வருபவர்களுக்கும் தேவையான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

100சதவீத பணிகள் நிறைவடைந்ததையடுத்து இன்று முதல் புதிய முனையம் செயல்பாட்டிற்கு வந்தது (Trichy International Airport’s new terminal).

புதிய முனையத்தில் 10ஏரோ பிரிட்ஜ்கள் (விமானத்தில் இருந்து நேரடியாக விமான நிலையத்திற்குள் வரும் பாதை) பயன்படுத்தப்பட உள்ளன. தற்போது 5ஏரோ பிரிட்ஜகள் பயன்படுத்த உள்ளோம். மீதமுள்ள 5 ஏரோ பிட்ஜ்கள் இன்னும் ஒரு சில மாதங்களில் பயன்பாட்டிற்கு வர உள்ளது.

விமான நிலையத்தின் புதிய முனையம் பயன்பாட்டிற்கு வந்ததை தொடர்ந்து விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி, மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமிஷனர் ஹரிசிங்நயால் காலையில் சிங்கப்பூரிலிருந்து முதலில் வந்த விமானத்தின் பயணிகளுக்கு பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர்.

புதிய முனையத்திற்கு வந்த முதல் விமானத்திற்கு வாட்டர் சல்யூட் முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

புதிய முனையம் சாலையிலிருந்து நீண்ட தூரம் உள்ளதால் புதிய முனையத்திற்கு உள்ளே பேருந்து இயக்க வேண்டுமென போக்குவரத்து துறையிலும் கோரிக்கை வைத்துள்ளதாக விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணியன் தெரிவிக்கிறார்.


Spread the love
Exit mobile version