தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநாடு மதுரை பாரபத்தியில் இன்று நடைபெறுகிறது. நேற்று இரவு முதலே லட்ச கணக்கான தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
நடிகரும் அரசியல்வாதியுமான விஜய், டிவிகே தலைவராக புதன்கிழமை இரவு மதுரை வந்தடைந்தார். அதற்க்கு ஆதரவாளர்களிடமிருந்து உற்சாக வரவேற்பு கிடைத்தது. விஜய்யின் பெற்றோர்களும் அரங்கிற்கு வந்து சேர்ந்துள்ளனர். இது சமீபத்திய ஆண்டுகளில் மிகப்பெரிய அரசியல் கூட்டங்களில் ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், தவெக தொண்டர்கள் சீமான் ஒழிக என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளருக்கு எதிராக முழக்கம் எழுப்பி வருகின்றனர்.
செஞ்சி கோட்டையை இந்திய பாரம்பரிய சின்னமாக அறிவித்த யுனெஸ்கோ, அதை மராட்டியர்கள் கட்டியதாக குறிப்பிட்டுருந்தது. இதை கண்டித்து விழுப்புரம் செஞ்சியில் நாதக கட்சி சார்பில் பொது கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சில் தலைமையேற்று பேசிய சீமான், தவெக தலைவர் விஜையையும், அவரது தொண்டர்களையும் கடுமையாக தாக்கி பேசியிருந்தார்.
அதற்கு எதிராக தான் இன்று தவெகவினர் சீமானை தாக்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.