கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் மகளிர், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள், ஆட்டோ ஓட்டுநர்கள் என 10 ஆயிரம் பேர் பயனடையும் வகையில் நலத்திட்ட உதவிகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார் .
முத்தமிழறிஞர் என்று அழைக்கப்படும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் நூற்றாண்டு விழா வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது . இதில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் பல நலத்திட்ட உதவிகளை திமுகவினர் செய்து வருகின்றனர் .
அந்தவகையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள முதியோர்களுக்கு தலா ரூ.10 ஆயிரத்தையும், மகளிர், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள், ஆட்டோ ஓட்டுநர்கள் என 10 ஆயிரம் பேர் பயனடையும் வகையில் நலத்திட்ட உதவிகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார் .
இதையடுத்து விழாவில் உரையாற்றிய அமைச்சர் உதயநிதி கூறியதாவது :
தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகப் போராடி வரும் கழகத்தின் சாதனைகளை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்த்து, நாற்பதையும் நமதாக்கிட கழகப் பணியை அறம்பட தொடங்கிடுவோம் திருவண்ணாமலையில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான உடன்பிறப்புகளுக்கு நன்றி என அமைச்சர் உதயநிதி தெரிவித்தார் .