Tamilnadu

வேட்புமனுவில் வெளியான உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் – எவ்வளவு தெரியுமா?

சென்னை சேப்பாக்கம்–திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.

இதையடுத்து, அவரது சொத்து விவரங்கள் பொதுமக்களுக்கு வெளியிடப்பட்டுள்ளன.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் இரண்டாவது முறையாக இந்த தொகுதியில் களம் காணும் அவர், திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் வேட்புமனுவை சமர்ப்பித்தார்.

அவரது பிரமாணப் பத்திரத்தின் படி, உதயநிதி ஸ்டாலின் பெயரில் அசையும் சொத்துகள் ரூ.12.92 கோடி மதிப்பிலும், அசையா சொத்துகள் ரூ.7.72 கோடி மதிப்பிலும் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அவரிடம் ரூ.50 ஆயிரம் ரொக்கமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேபோல், அவரது மனைவி பெயரில் ரூ.13.25 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகள் உள்ளதாகவும், அசையா சொத்துகள் எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவல்கள் வேட்புமனு தாக்கலுடன் வெளியான நிலையில், தேர்தல் சூழலில் கவனம் ஈர்த்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *