உ.பி அரசு மருத்துவமனை தீ விபத்தில் பல பச்சிளம் குழந்தைகளை காப்பாற்றியவரின் இரட்டைக் குழந்தைகள் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது .
உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள அரசு மருத்துவமனை தீ விபத்தின் போது, யாகூப் மன்சூரி என்ற கூலித் தொழிலாளி பல பச்சிளம் குழந்தைகளை காப்பாற்றியுள்ளார்.
Also Read : கடுமையான விமர்சனங்களை சந்திக்கும் `கங்குவா’ – கட்டமான பதிலடி கொடுத்த ஜோதிகா..!!
இந்நிலையில் தனது இரட்டை பெண் குழந்தைகளை காணாமல் அவர் கண்ணீருடன் மருத்துவமனை முழுவதும் தேடி வந்த நிலையில் அவரது இரட்டை பெண் குழந்தைகள் இன்று சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது .
மருத்துவமனை தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த இந்த தீ விபத்து சம்பவத்தின் போது, வெளியே படுத்திருந்த யாகூப் ஜன்னல் கண்ணாடியை உடைத்து உள்ளே சென்று கரும் புகைக்கு இடையே பல குழந்தைகளை தூக்கி வந்து காப்பாற்றியுள்ளார் அனால் அவரது குழந்தைகள் இந்த விபத்தில் உயிரிழந்துள்ள நிலையில் அந்த மனிதநேயம் மிக்க மனிதருக்கு பலரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.