ITamilTv

சம்பளமின்றி கொத்தடிமைகளாக இருந்த குழந்தை தொழிலாளர்கள்… அதிரடியாக மீட்ட காவல் துறையினர்..!

Spread the love

உத்தரபிரதேசத்தில், சம்பளமின்றி கொத்தடிமைகளாக வேலை பார்த்து வந்த குழந்தை தொழிலாளர்கள் (child labour) 21 பேரை ரயில்வே காவல் துறையினர் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

உத்தரப் பிரதேசத்தின் சந்தவுலி மாவட்டத்தில் உள்ள தீன்தயாள் உபாத்யாய் ரயில் நிலையத்தில் 11 சிறுவர்கள் உட்பட 21 பேர் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்து உள்ளனர். இந்நிலையில், அவர்களை கண்காணித்த ரயில்வே பாதுகாப்பு போலீசார் அவர்களை மீட்டு அவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

அந்த விசாரணையில், அவர்கள் வாரணாசி மாவட்டத்தில் லோதா பகுதியில் ரயில் தண்டவாளத்திற்கான ஸ்லீப்பர் கட்டை உற்பத்தி ஆலையில், அவர்கள் வேலை பார்த்து வருவதாகவும் ஆனால், அங்கு அவர்களுக்கு சம்பளம் எதுவும் கொடுக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளனர்.

இதனையடுத்து, காவல்துறையினர் அந்த குழந்தை தொழிலாளர்களை மீட்டனர். அதன் பிறகு மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளர்கள் (child labour) சிலர் கூறுகையில், மாதம் 1200 ரூபாய் சம்பளம் என கூறி தங்களை சூப்பர்வைசர் அந்த ஆலைக்கு அழைத்துச் சென்றதாகவும் ஆனால், அவர் கூறியபடி நடந்து கொள்ளவில்லை என்றும் எங்களுக்கு சம்பளம் எதுவும் கொடுக்கவில்லை என்றும் கூறியுள்ளனர்.

child labour

மேலும், அந்த ஆலையின் உரிமையாளரும் எங்களை மிரட்டத் தொடங்கினார் எனவும், ஒடிசாவின் ராய்கார் மாவட்டத்தில் இருந்து தான் அவர்கள் வந்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.

இந்நிலையில், மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளர்கள் அவர்களது வீட்டிற்கு திரும்ப செல்ல விரும்புவதாகவும், மேலும் அவர்களின் நண்பர்கள் இன்னும் சிலர் அந்த ஆலையில் மாட்டிக் கொண்டு வேலை செய்து வருவதாகவும் கூறியுள்ளனர்.

மேலும், அந்த ஆலையின் சூப்பர்வைசர் கூறியபடி சம்பளம் ஏதும் தங்களுக்கு தரப்படவில்லை என்றும், அதனால் ஆலையில் இருந்து தாங்கள் மட்டும் தப்பித்து வந்து விட்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில், அந்த ஆலையில் சிக்கியுள்ள மீதமுள்ள குழந்தை தொழிலாளர்களை மீட்கும் முயற்சியில் ரயில்வே காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


Spread the love
Exit mobile version