அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (joe Biden)ஊடகங்களின் சுதந்திரம் எப்படி ஒரு நாட்டை வளமாக்கும் என்பது குறித்து மோடியிடம் எடுத்துரைத்தாக தெரிவித்துள்ளார்.
ஜி20 உச்சி மாநாடு செப்டம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. 2 நாள்கள் நடைபெற்ற உச்சி மாநாட்டில் 20 உறுப்பு நாடுகள் உட்பட 40 நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
டெல்லியில் ஜி-20 மாநாடு நடைபெற்று முடிந்த நிலையில், பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.பொதுவாக இருநாட்டு தலைவர்கள் சந்தித்து பேசும் போது செய்தியாளர் சந்திப்பை நடத்துவது வழக்கம்.
அந்த வகையில், செய்தியாளர் சந்திப்பை நடத்த அமெரிக்க அரசு சார்பில் இந்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் ஆனால்செய்தியாளர் சந்திப்புக்கு இந்திய அரசு அனுமதி மறுத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், டெல்லியில் ஜி 20 மாநாட்டை முடித்து கொண்டு வியட்நாம் நாட்டுக்குஅமெரிக்க அதிபர் ஜோ பைடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர்,மனித உரிமைகளைப் பேணுவதின் முக்கியத்துவம் குறித்தும், ஊடகங்களின் சுதந்திரம் ஒரு நாட்டை எப்படி வளமாக்கும் என்பது குறித்து மோடியிடம் எடுத்துரைத்தேன். மனித உரிமைகளைப் பேணுவதின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தாக தெரிவித்தார்.