Site icon ITamilTv

ரேஷன் பொருட்கள் வாங்குவதிலும் முறைகேடா? பொங்கியெழுந்த வானதி!!

Spread the love

ரேஷன் பொருட்கள் வாங்குவதிலும் முறைகேடு நடைபெற்று உள்ளதாக கோவை தெற்கு தொகுதி தமிழக சட்டமன்ற உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன்(Vanathi Srinivasan) குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழக நுகர்பொருள் வாணிப கழகம், ரேஷனில் வழங்க, 60,000 டன் கனடா மஞ்சள் பருப்பு வாங்க உள்ளது. வெளிச்சந்தையில் இம்மாதம் முதல் துவரம் பருப்பு விலை குறைய உள்ளதால், அதிகாரிகள், வேண்டிய நிறுவனத்திடம் இருந்து கிலோ கனடா பருப்பை, 134 ரூபாய்க்கு வாங்க முயற்சிக்கின்றனர். இதனால், அரசுக்கு, 60 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

இது குறித்து வானதி ஸ்ரீனிவாசன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்..

ரேஷன் பொருட்கள் வாங்குவதிலும் முறைகேடா? தடுக்குமா தமிழக அரசுதமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்படும் துவரம் பருப்பை வாங்காமல் கனடா மஞ்சள் பருப்பை அதிக விலை கொடுத்து தமிழக நுகர்பொருள் வாணிப கழகம் வாங்க உள்ளதாக தகவல்கள் வருகிறது.

வெளிச்சந்தையில் துவரம் பருப்பு விலையின் குறைய உள்ள நிலையில் அதிக விலை கொடுத்து கனடா பருப்பை வாங்குவதன் நோக்கம் என்ன? 60000 டன் பருப்பை கிலோ 134 ரூபாய்க்கு வாங்க டெண்டர் விடப்பட்டுள்ளது. இதனால், தமிழக அரசிற்கு, 60 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

மேலும் நாடு முழுதும் துவரை அறுவடை துவங்கியுள்ளது. அடுத்த மாதத்தில் புதிய துவரம் பருப்பு வெளிச்சந்தைகளில் குறைந்த விலையில் கிடைக்கும். இந்த நிலையில் 3 மாதத்திற்கு தேவையான 60000 டன் பருப்பு வாங்க வேண்டியதன் அவசியம் என்ன? என்று வானதிஸ்ரீனிவாசன் கேள்வியெழுப்பியுள்ளார்.


Spread the love
Exit mobile version