ITamilTv

ரவுடி ஜெகனை என்கவுண்டர் செய்ய உத்தரவிடவில்லை – திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் பேட்டி

Spread the love

ரவுடி ஜெகனை என்கவுண்டர் செய்ய உத்தரவிடவில்லை அவரை பிடிக்க முயன்றபோது நாட்டு துப்பாக்கி சணல் வெடிகுண்டு அருவாளால் தாக்க முயன்றதால் காவல்துறையினர் தங்களை தற்காத்துக் கொள்வதற்காக வேறு வழியின்றி நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு தான ஜெகனின் இந்த நிலைக்கு காரணம் என திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் தெரிவித்துள்ளார்.

பிரபல ரவுடி ஜெகன் என்கவுண்டர் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த திருச்சி காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் கூறியதாவது :

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள பனையகுறிச்சியை சேர்ந்தவர் ஜெகன் என்கிற கொம்பன் ஜெகன் . இவர் மீது தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கொலை, அடிதடி மற்றும் கொள்ளை உள்ளிட்ட 53 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதனைத்தொடர்ந்து கூலிப்படையாகவும் ஜெகன் செயல்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே சனமங்கலம் வனப்பகுதியில் நள்ளிரவு நேரங்களில் ஆடு மற்றும் பன்றி வளர்க்கும் தொழிலாளர்களிடம் மர்ம நபர்கள் சிலர் கத்தியை காட்டி மிரட்டி ஆடு மற்றும் பன்றிகளை பறித்து செல்வதாக திருச்சி குற்ற ரவுடிகள் கண்காணிப்பு சிறப்பு தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததுள்ளது.

இதையடுத்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர் கருணாகரன் தலைமையில் காவல் உதவி ஆய்வாளர் வினோத், கார்த்தி தலைமை காவலர்கள் அறிவழகன் மற்றும் பிரெட்ரிக் வசந்த் உள்ளிட்ட தனிப்படை போலீசார் சனமங்கலம் வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

வனப்பகுதியில் பதுங்கியிருந்த ரவுடி ஜெகன் போலீசாரை பார்த்ததும் ஓட முயன்றபோது அவரை போலீசார் விரட்டி பிடிக்க முயன்றனர். இந்த சம்பவத்தின்போது போலீசாருக்கும் ரவுடி ஜெகன் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது .

அப்போது ரவுடி ஜெகன் போலீசார் மீது நாட்டு சணல் வெடிகுண்டை வீசியுள்ளார். இதில் தப்பித்த போலீசார் மீண்டும் ஜெகனை பிடிக்க முயன்றபோது அறிவாளால் ரவுடி ஜெகன் தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் காவல் உதவி ஆய்வாளர் வினோத் இடது கையில் அரிவாள் வெட்டுப்பட்டு படுகாயம் அடைந்துள்ளார்.

இதையடுத்து போலீசார் தங்களை தற்காத்துக் கொள்வதற்காக வேறு வழியின்றி ரவுடி கொம்பன் ஜெகன் மீது இரண்டு முறை துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பல குற்ற சம்பவங்களில் கைதான ஜெகன் சிறையில் இருக்கும் போது அவருக்கு நிறைய தொடர்பு கிடைத்துள்ளது அதன் மூலம் பல பேரை மிரட்டி பணம் பறிக்கும் செயல் ஈடுபடக்கூடிய ஒரு கேங்ஸ்டர் ஆக வலம் வந்துள்ளார்..

ஏரியாவுக்குள் பிரபல ரவுடியாக மாறிய ஜெகன் A+ பிரிவில் ரவுடியாகவும் கேங் லீடராகவும் இருந்து உள்ளார்.

கடந்த 20 நாட்களுக்கு முன்பாக இவருடைய கூட்டாளிகள் எட்டு பேர் கைதாகி உள்ளார்கள். தொடர்ச்சியாக A+பிரிவில் உள்ள ரவுடிகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் அவர்கள் ஏதேனும் குற்ற சம்பவங்கள் ஈடுபட்டால் உடனடியாக குண்டாஸ் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

ஜெகனை பிடிக்க வனப்பகுதிக்குள் சென்ற காவலர்களுக்கு அவர் துப்பாக்கி வைத்திருப்பார் என்று தெரியவில்லை அதன் பிறகு சிறுகனூர் ஆய்வாளர் சென்று பார்த்த போது தான் துப்பாக்கி இருப்பது தெரிய வந்தது.போலீசார் சுடாமல் இறந்திருந்தால் ஜெகன் போலீசாரை கொலை செய்ய அதிக வாய்ப்பு இருந்திருக்கும் என திருச்சி காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் தெரிவித்துள்ளார்.


Spread the love
Exit mobile version