ITamilTv

சீமான் கட்சி கொடியில் இருப்பது புலி அல்ல பூனை – வீரலட்சுமி ஆவேசம்!

Veeralakshmi Tell about Seeman party flag

Spread the love

Veeralakshmi Tell about Seeman party flag : தமிழ்நாட்டில் கொக்கேன் போதை பொருளை பயன்படுத்துகின்ற நடிகர் நடிகைகளை கண்டித்து தமிழர் முன்னேற்ற படை சார்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழர் முன்னேற்ற படை நிறுவனத் தலைவர் வீரலட்சுமி தலைமையில் தமிழகத்தில் கொக்கின் போதை பொருளை பயன்படுத்துகின்ற நடிகர் நடிகைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகர் விஜய் நடிகர் தனுஷ் ஒலி டோர் கொக்கின் போதை பொருள் பயன்படுத்தியதாக பாடகி சுசித்ரா தெரிவித்த நிலையில், அவர்கள் மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை வேண்டும் என வலியுறுத்தி கண்டனம் முழக்கம் எழுப்பப்பட்டது.

இதையும் படிங்க : 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்குகிறார் விஜய்!

அதனைத் தொடர்ந்து சென்னை தியாகராய நகரிலுள்ள தென்னிந்திய நடிகர் சங்கத்தை முற்றுகையிட முயன்ற தமிழர் முன்னேற்றப் படை நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய வீரலட்சுமி (Veeralakshmi Tell about Seeman party flag),

“பாடகி சுசித்ரா நடிகை விஜய் தனுஷ் சுசித்ராவின் கணவர் கார்த்தி உள்ளிட்டோர் கொக்கேன் போதை பொருள் பயன்படுத்துவதாக பாடகி சுசித்ரா குற்றம் சாட்டி இருப்பதால் அவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறிப்பாக நடிகர் விஜய்யின் இல்லத்தில் இந்த போதைப் பொருள் பயன்படுத்தியதாக அவர் குற்றம் சாட்டி உள்ளார். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போதைய சினிமாத்துறை நல்ல கருத்துக்களை சொல்லக் கூடிய துறையாக இல்லாமல் காமத்துறையாக இருப்பதாகவும்,

நடிகர் விஜய் போன்றவர்கள், தான் சம்பாதித்த பணத்தை ரசிகர்களுக்கு செலவு செய்யாமல் வயதான பிறகு அரசியலுக்கு வர விரும்புகிறார்கள் என்றும் சினிமா துறையில் பல்வேறு நடிகர் நடிகைகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் இதனை கண்டு கொள்ளாத விஜய் தமிழகத்திற்கு அரசியலுக்கு வருகை தந்து என்ன செய்யப் போகிறார்.

seeman

நாம் தமிழர் சீமான் கட்சியில் உள்ள சின்னம் புலி அல்ல பூனை.. உண்மையான தமிழச்சி நான் தான் புலி சின்னத்தை பயன்படுத்த வேண்டும்.

தமிழரே இல்லாத சீமான் சோழர்களின் சின்னமான புலி சின்னத்தை பயன்படுத்தும் போது தமிழச்சியான நான் பயன்படுத்துவதில் என்ன தவறு இருக்கிறது” எனக் கூறியுள்ளார்.


Spread the love
Exit mobile version