Site icon ITamilTv

மாவட்ட ஆட்சியரை சந்தித்த வேல்முருகன்..என்எல்சி எதிராக முன்வைத்த முக்கிய கோரிக்கை!

Spread the love

என்.எல்.சி நிர்வாகம் விவசாயிகளின் விலை நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று
தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் அவர்களை என்எல்சி விவகாரம் தொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவரும் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் பேசுகையில்,

என்.எல்.சி நிர்வாகம் விவசாயிகளின் விலை நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அப்படி நிலம் தரும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகை, நிரந்தர வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என பல்வேறு கட்சிகளை ஒருங்கிணைத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தேன்.

அதேபோன்று சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தேன். மேலும் பல்வேறு முறை பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியதில் 300 நபர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தி அதன் பிறகு அதனை 700 நபர்களாக உயர்த்தினோம். அதன் பிறகு 1000 நபர்களுக்கு பணி ஓய்வு பெறும் வரை தொடர் ஒப்பந்த வேலை வழங்க நடவடிக்கை எடுத்தோம்.

அதே போன்று 2006 ஆண்டுக்கு பின் நிலம் வழங்கிய சில விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை வழங்கப்பட்டது. இந்த நிலையில் ஏற்கனவே முழு தொகை வழங்கப்பட்டவர்களுக்கு உயர்த்திய கருணைத் தொகை வழங்க கோரி எனது தலைமையில் பல்வேறு கட்சிகளுடன் சேர்ந்து முதலமைச்சரை பார்த்து வலியுறுத்தினோம் அதன்படி தற்பொழுது 10 லட்சம் ரூபாய் வரை கரணைத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து நிலம் கொடுக்கும் குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை மூன்றாண்டு கால பயிற்சிக்குப் பின்னர் தருவதாக தெரிவித்தனர் ஆனால் இதுவரை வழங்கவில்லை. எனவே நிலத்தை கையகப்படுத்திய உடனேயே நிரந்தர வேலை வழங்க வேண்டும் என ஒரு கோரிக்கையை அறிவுறுத்தி உள்ளேன்.

மேலும் நிலம் வழங்கியவர்களுக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும் என எனது கோரிக்கையை தமிழக முதல்வரிடம் வைத்ததை தொடர்ந்து கோரிக்கையின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்துடன் அது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் இரண்டு மாத காலம் அவகாசம் கேட்டுள்ளார். அதன்படி என்எல்சியுடன் பேச்சு வார்த்தை நடத்தி நிரந்தர வேலைக்கான ஏற்பாடு செய்கிறேன் என உறுதி அளித்துள்ளார். இதற்காக தமிழக முதல்வர் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோன்று வாய்க்கால் வெட்டும் பணி என்பது அங்கு பயிர் செய்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 15,000 இழப்பீடு தரப்படும் என்பதை மாற்றி 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்து அவர்களின் ஒப்புதலோடு மட்டுமே மாவட்ட நிர்வாகம் வாய்க்கால் வெட்டும் பணியில் ஈடுபட்டதாக மாவட்ட ஆட்சியர் என்னிடம் விளக்கம் தந்தார்.

மேலும் இனி அந்த விவசாய நிலத்தில் ராட்சச இயந்திரங்களைக் கொண்டு அங்கு பணி செய்ய மாட்டோம் என மாவட்ட ஆட்சியர் உத்திரவாதம் தந்துள்ளார்.


Spread the love
Exit mobile version