புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் கடந்த வருடம் மர்மநபர்கள் ( chennai hc ) மனித கழிவுகளை கலந்து மனிதனாக இருக்கும் தகுதியினை இழந்த சம்பவம் அரங்கேறி தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையில்
வழக்குப்பதிவு செய்யப்பட்டு 15 மாதங்களாகியும், புலன் விசாரணையில் ஏன் தாமதம் எனவும், விசாரணை எப்போது முடிக்கப்படும் எனவும் தலைமை நீதிபதி அமர்வு காரசார கேள்விகளை எழுப்பி உள்ளது.
Also Read : https://itamiltv.com/jee-main-result-in-10-days/
இந்த வழக்கில் 337 சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவுச்செய்யப்பட்டு உள்ளதாகவும், மூன்று மாதங்களில் புலன் விசாரணை முடிக்கப்படும் எனவும் தமிழக காவல் துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் மாநில அரசு தீவிரம் காட்டாததால், ( chennai hc ) கிராம மக்கள், மக்களவை தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக கூறப்பட்டிருக்கும் நிகையில் ஜூலை 3க்குள் விசாரணை முடிக்கப்பட்டிருக்கும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்த நீதிபதிகள், வழக்கை அன்றைய தினத்திற்கு ஒத்திவைத்துள்ளனர்.