ITamilTv

தமிழ்நாட்டில் சிறைவாசிகளுக்கு வீடியோ கால் வசதி அறிமுகம் – அரசாணை வெளியிட்டது தமிழக அரசு..!!

Spread the love

தமிழ்நாட்டில் சிறைவாசிகளுக்கு வீடியோ கால் வசதியினை புதியதாக ஏற்படுத்த அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறிருப்பதாவது :

தமிழ்நாட்டில் உள்ள சிறைவாசிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் தொலைபேசி வசதியின் கால அளவை 3 நாட்களுக்கு ஒரு முறை, மாதத்திற்கு 10 முறை, ஒரு அழைப்பிற்கு 12 நிமிடங்கள் என உயர்த்தி வழங்குவதோடு காணொலி (வீடியோ கால்) தொலைபேசி வசதியினை புதியதாக ஏற்படுத்த தமிழ்நாடு அரசு இந்த அரசாணையின் மூலம் அனுமதி அளிக்கிறது.

சிறைவாசிகளின் மன அழுத்தத்தை குறைக்கவும் அவர்கள் தவறுகளை உணர்ந்து மேலும் குற்றங்களில் ஈடுபடுவதை தடுத்திடும பொருட்டும், சிறைவாசிகள் தமது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், வழக்குரைஞர்கள் ஆகியோரிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள ஆடியோ கால் வசதி வழங்கபட்டு வந்தது .

இந்நிலையில் சிறைவாசிகளுக்காக வழங்கப்பட்டு வரும் தொலைபேசி வசதிக்கான (ஆடியோ) கால அளவை 3 நாட்களுக்கு ஒரு முறை மாதத்திற்கு 10 முறை ஒரு அழைப்பிற்கு 12 நிமிடங்கள் என உயர்த்தி வழங்குவதோடு, காணொளி (வீடியோ) தொலைபேசி வசதியும் ஏற்படுத்தப்படும் என தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Spread the love
Exit mobile version