Site icon itamiltv.com

234 வேட்பாளர்கள்..ஞாயிற்றுக்கிழமை தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடு – விஜய் அறிவிப்பு!

வரவிருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் 234 வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் விஜய் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் ஆதரவுடன் வளர்ந்து வரும் இந்த கட்சி, மாற்றத்தை நோக்கிய அரசியல் பாதையில் முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பல்வேறு அரசியல் கட்சிகள் வாக்குறுதிகள் மூலம் மக்களை ஏமாற்றி வருவதாக குற்றம் சாட்டியுள்ள அவர், உண்மையான ஜனநாயக அரசியலை முன்னெடுக்க தமிழக வெற்றிக் கழகம் செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மார்ச் 29ஆம் தேதி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் மாநில அளவிலான நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் விஜய் கலந்து கொண்டு, தமிழ்நாட்டின் 234 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியின் 30 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிமுகப்படுத்துவார் என கூறப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சி கட்டுப்பாடுகளுடன் நடைபெறும் என்பதால், தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும். மேலும், விசில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் வெற்றி பெற அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Exit mobile version