Site icon ITamilTv

திராவிட கட்சியா TVK? பாஜக விமர்சிக்க காரணம்?

Spread the love

தந்தை பெரியாரின் பிறந்தநாளை ஒட்டி பல்வேறு அரசியல் தலைவர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வரும் நிலையில் தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜய் வாழ்த்து மட்டும் ஏன் விமர்சிக்கபடுகிறது என்று பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதளப் பக்கத்தில், சாதி, மத ஆதிக்கம் மற்றும் மூடப்பழக்க வழக்கங்களால் விலங்கிடப்பட்டுக் கிடந்த தமிழக மக்களிடையே விழிப்புணர்வை விதைத்தவர்; பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சுய விடுதலை வேட்கையின் மூலம், ஏற்றத் தாழ்வுகளால் உண்டாக்கப்பட்ட அடிமைத் தளைகளை அறுத்தெறிந்தவர்; மக்களைப் பகுத்தறிவு மனப்பான்மையுடன் போராடத் தூண்டியவர்;

சமூக சீர்திருத்தவாதி, பகுத்தறிவுப் பகலவன், தென்னகத்தின் சாக்ரட்டீஸ், தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளில், அவர் வலியுறுத்திய பெண் உரிமை, பெண்கல்வி, பெண்கள் பாதுகாப்பு, சமத்துவம், சம உரிமை, சமூகநீதிப்பாதையில் பயணிக்க உறுதியேற்போம்!” என தந்தை பெரியாரின் புகழைப் போற்றி பதிவிட்டிருந்தார்.அத்தோடு நிறுத்தாமல் சென்னை பெரியார் திடலிலுள்ள தந்தை பெரியாரின் நினைவிடத்திற்கு நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார்.

ஏற்கனவே பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள். ஆரோக்கியமும், ஆயுளும் பெற வேண்டும் என பிரார்த்திக்கிறேன் என்று ஒரு வரியில் குறிப்பிட்ட விஜய், சமீபத்தில் அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளுக்கு பதிவிட்ட நீண்ட வாழ்த்தும், நேற்று ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து கூறியதும், தற்போது பெரியாருக்கு மரியாதை செலுத்திய நிகழ்வுகள் சில சர்ச்சைகளுக்கு அடித்தளமிட்டுள்ளது.

பிற பண்டிகைக்கு வாழ்த்து சொன்ன விஜய் ஏன் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லவில்லை என முன்னாள் ஆளுநர் தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் விஜய் கட்சி தொடங்கும் முன்பே திராவிட சாயலில் பயணிப்பது போல தான் தெரிந்தது. மீண்டும் இன்னொரு கட்சி திராவிட சாயலில் வேண்டாம். இனி தேசிய சாயலில் தான் வரவேண்டும். விஜயும் திராவிட கட்சிகள் போல பயணிக்காமல் வேறு பாணியில் பயணிப்பார் என்று தான் எதிர்பார்த்தோம்.

அவருடைய படங்கள் மட்டும் தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் வெளியாகி லாபம் பார்க்க வேண்டும். ஆனால் அவர் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாமல் இருப்பதும், இருமொழி கொள்கைக்கு ஆதரவு கொடுப்பதுமாக இருக்கிறார். இது விஜய்க்கு நல்லதல்ல. திமுகவின் கிளைக்கழகம் போல ஆகிடுமோ தவெக என விமர்சித்துள்ளார் தமிழிசை.

இந்நிலையில் தமிழிசையின் பதிவுக்கு தவெக கட்சியினர் பல்வேறு கலவையான விமர்சனங்களை செய்து வருவதும் வேடிக்கையாக உள்ளது. அதில் குறிப்பாக பிரதமருக்கு வாழ்த்து சொல்லும்போது நடுநிலையாக தெரிந்த விஜய், பெரியாருக்கு வாழ்த்து சொல்லும்போது திமுக சாயலில் தெரிகிறாரா? விஜய் கொள்கைக் கூட இந்தியை படிக்கக் கூடாது என்பதல்ல திணிக்கக் கூடாது என்பது தான். ஆகவே விமர்சனம் வைக்கும் முன்பு முழுமையாக தெரிந்துகொண்டு விமர்சனம் வைக்க வேண்டும்.

இன்னொருபக்கம் சோஷியல் மீடியாவில் மட்டும் வாழ்த்து சொல்லி விட்டு நேரில் வரவில்லை என விமர்சித்த திமுக ஆதரவாளர்களுக்கும் சேர்த்து பதில் கொடுத்துவிட்டார் எங்கள் தலைவர் என பதிவிட்டு வம்பிழுத்துக்கொண்டு இருக்கின்றனர் தவெக ஆதரவாளர்கள்.


Spread the love
Exit mobile version