ITamilTv

villagers’s Dream : சிறுக சிறுக சேர்த்த பணம்! – வானில் பறந்த கிராம மக்கள்

சிறுக சிறுக சேர்த்த பணம்! - வானில் பறந்த கிராம மக்கள்

Spread the love

நெல்லை மாவட்டத்தில் உள்ள தாட்டான்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்த மக்கள் தாங்கள் சிறுக சிறுக சேமித்த பணத்தில் விமானத்தில் பறந்து தங்களது நீண்ட கால கனவை (villagers’s Dream) நிறைவேற்றி மகிழ்ந்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் அம்பையை அடுத்த வி.கே.புரம் அருகே என்ற உள்ள தாட்டான்பட்டி என்ற கிராமத்தில் இங்கு சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்த கிராமத்தில் பெரும்பாலானோர் விவசாயம் செய்து வருகிறனர். மேலும் ராணுவம், காவல்துறை உள்ளிட்ட அரசு துறைகளிலும் இளைஞர்கள் வேலை செய்து வருகின்றனர்.

ராணுவத்தில் பணியாற்றும் அந்த கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள், விமானத்தில் சொந்த ஊருக்கு வந்து செல்கின்றனர். இதனால் தாட்டான்பட்டியில் வசிக்கும் பெண்களுக்கும் ஒரு முறையாவது விமானத்தில் பறந்து செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டனர்.

இந்த நிலையில் அந்த பெண்களின் நீண்ட ஆண்டு கனவை நிறைவேற்றும் விதமாக ஊர்மக்கள் அனைவரும் பணத்தை சிறுக சிறுக சேமித்து விமானத்தில் பறக்க திட்டமிட்டனர்.

அதன்படி பணத்தை சேமித்து வந்த கிராம மக்கள் நேற்று முன்தினம் இரவு புனித சுற்றுலாவாக விமானம் மூலமாக கோவா புறப்பட்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை அருளகம் பங்கு தந்தை எட்வர்ட் ராயன் தலைமையில் அருள்பால்துரை, அருளானந்தம் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

முன்னதாக அவர்கள் ஊரில் இருந்து புறப்பட்டபோது, அங்குள்ள புனித அருளானந்தர் ஆலயம் முன்பு அருளகம் பங்கு தந்தை எட்வர்ட் ராயன் தலைமையில் கிராம மக்கள் அனைவரும் கேக் வெட்டி கொண்டாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

கேக் வெட்டி கொண்டாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்
கேக் வெட்டி கொண்டாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்

கோவா புறப்பட்ட அவர்கள் தொடர்ந்து அங்குள்ள சவேரியாரை காலை பார்வையிட்டனர். இதற்காக அந்த கிராமத்தை சேர்ந்த பெண்கள் உள்பட சுமார் 134 பேர் விமானத்தில் பறந்தனர்.

அனைவருக்கும் தனியாக அடையாள அட்டை, உடைமைகள் தொலைந்து விடாமல் இருக்க அனைவரது உடைகளிலும் சிவப்பு நிற துணி உள்ளிட்டவை அடையாளமாக வைத்து பல்வேறு திட்டமிடுதலுடன் சென்றனர்.

இதுகுறித்து கூறிய பங்கு தந்தை எட்வர்ட் ராயன்,
சிறு சிறு சேமிப்பு மூலமாக புனித பயணமாக சவேரியாரை தரிசனம் செய்ய உள்ளோம்.

இதையும் படிங்க : Pa.ranjith: இன்று வீட்டில் கற்பூரம் ஏற்றவில்லை என்றால் நாம் தீவிரவாதிகள்!- பா.ரஞ்சித்

எங்கள் கிராமத்தினர் நீண்ட ஆண்டுகளாக விமானத்தில் செல்ல வேண்டும் என கூறினர்.
அதனால் இந்த புனித சுற்றுலாவிற்கு விமானத்தில் சென்றுவிட்டு, ரெயிலில் ஊருக்கு திரும்ப உள்ளோம்.

சுமார் 10 ஆண்டுகளாக சிறு சிறு சேமிப்பு மூலமாக எங்கள் பணத்தில் செல்கிறோம்.இதனால் எங்களது நீண்ட நாள் கனவு நிறைவேறி (villagers’s Dream) இருக்கிறது.

இன்றும், நாளையும் என 2 நாட்கள் கோவாவில் தங்கி புனித சவேரியார் ஆலயத்தை சுற்றி பார்க்க உள்ளோம் என்று கூறினார்


Spread the love
Exit mobile version