விநாயகர் சதுர்த்தி விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக, சென்னையில் இன்று கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது
எதிர்வரும் திங்கள்கிழமை (18.09.2023) அன்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தியை கோலாகலமாக கொடப்பட உள்ளது . இதற்காக தமிழ்நாடு அரசு பொது விடுமுறையம் அறிவித்துள்ளது .
இந்நிலையில் சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளின் வசித்திக்காக சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது .
மெட்ரோ இரயில் பயணிகளின் வசதிகாக நெரிசல்மிகு நேரத்தில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ இரயில் சேவை, இன்று (15.09.2023) மட்டும் இரவு 10:00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நீட்டிக்கப்பட்ட நெரிசல்மிகு நேரங்களில், இரவு 8:00 மணி முதல் 10:00 மணி வரை மெட்ரோ இரயில் சேவைகள் இரண்டு வழித்தடங்களிலும் 9 நிமிட இடைவெளிக்கு பதிலாக 6 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.
போக்குவரத்து நெரிசல் மற்றும் சிரமம் இல்லாத பயணத்தை மேற்கொள்ள பயணிகள் மெட்ரோ இரயில் சேவையை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேற்கண்ட மெட்ரோ இரயில் நீட்டிப்பு சேவைகள் இன்று (15.09.2023) மட்டுமே என சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.